அண்ணாத்த படத்தோட ட்ரெயிலர் ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்... சூப்பர் அப்டேட்!

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது.

படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த சூப்பர் படமாக வெளியாகவுள்ளது அண்ணாத்த. வரும் தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக ரஜினியுடன் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

நான்கு ஹீரோயின்கள்

நான்கு ஹீரோயின்கள்

மற்றபடி ரஜினியின் முன்னாள் ஹீரோயின்களும் படத்தில் அவருடன் இணைந்துள்ள படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாடல் டைட்டில் பாடலாக அமைந்த நிலையில் இரண்டாவது பாடல் டூயட் பாடலாக வெளியானது.

இமான் இசை

இமான் இசை

படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். டைட்டில் லுக் உள்ளிட்டவற்றில் இவரது மெனக்கெடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்தது. பாடல்களிலும் இவர் சிறப்பாக இசையமைத்துள்ளார். குறிப்பாக லிரிக் வீடியோவாக வெளியான டைட்டில் பாடல் எஸ்பிபியின் குரலில் சிறப்பாக அமைந்துள்ளது. அதிரடி சரவெடியாக சூப்பர்ஸ்டாரை இந்தப் பாடலில் காண முடிந்தது.

நயன்தாராவுடன் டூயட்

நயன்தாராவுடன் டூயட்

அடுத்ததாக வெளியான டூயட் பாடலிலும் நயன்தாராவுடன் இவர் உள்ள ஸ்டில்ஸ் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சூப்பர்ஸ்டார் படம் என்றாலே வசூலில் எப்போதும் சாதனை புரியும் இந்தப் படமும் சிறப்பான வசூலை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

எகிறியுள்ள எதிர்பார்ப்பு

எகிறியுள்ள எதிர்பார்ப்பு

குறிப்பாக சிவா இவருடன் இணைந்து படத்தை இயக்கியுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதை நிரூபிக்கும்வகையில் சமீபத்தில் வெளியான டீசரும் சிறப்பாக அமைந்துள்ளது. தலைவர் நடந்தால் சரவெடி என்று தோன்றும் வகையில் டீசர் அமைந்துள்ளது.

இம்மாத இறுதியில் ட்ரெயிலர்

இம்மாத இறுதியில் ட்ரெயிலர்

இந்நிலையில் தற்போது அடுத்ததாக ட்ரெயிலர் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். படம் ரிலீசாக ஏறக்குறைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் ட்ரெயிலர் ரிலீஸ் இம்மாத இறுதியில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர்களும் ட்ரெயிலர் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X