அண்ணாத்த படத்தின் சிறப்பான வா சாமி பாடல்.... 6 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை!
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியையொட்டி ரிலீசான படம் அண்ணாத்த.
இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் ஓடி வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
முன்னதாக வெளியான இந்தப் படத்தின் வா சாமி லிரிக் வீடியோ பாடல் தற்போது 6 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசான படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவுடன் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

அண்ணன் -தங்கை பாசம்
தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவரும் இந்தப்படம் வெளியான சில தினங்களிலேயே 200 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. தொடர்ந்து திரையரங்குகளில் ரிசிகர்களின் ஆதரவுடன் ஓடி வருகிறது. இந்தப் படத்தின் அண்ணன் -தங்கை பாசம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

பழைய ஹீரோயின்கள்
மேலும் ரஜினியின் பழைய ஹீரோயின்களான குஷ்பூ மற்றும் மீனா கதாபாத்திரங்கள் நகைச்சுவையுடன் ஆரம்பித்து சென்டிமெண்டுடன் முடிந்ததும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமோய், அத்தான் என்று அவர்கள் உருகுவது வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினியின் கிராமத்து கெட்டப்
ரஜினியின் கதாபாத்திரம் கிராமத்து கெட்டப்பில் சிறப்பாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியை இந்தப் படத்தின்மூலம் கமர்ஷியல் அவதாரம் எடுக்க வைத்துள்ளார் டைரக்டர். மேலும் படத்தில் பஞ்ச் டயலாக்கிற்கும் குறைவில்லாமல் இருந்ததும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இமான் இசை
ரஜினியின் தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான சிறப்பான நடிப்பை வெளிப்படுததியுள்ளனர். இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த எஸ்பிபி ரஜினிக்காக இறுதியாக இந்தப் படத்தில் பாடியுள்ள அண்ணாத்த பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.
Recommended Video

சிறப்பான வா சாமி பாடல்
இதேபோல படத்தின் வா சாமி பாடலும் சிறப்பாக உள்ளது. இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக ரிலீசுக்கு முன்னதாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், யூடியூபில் வெளியான இந்தப் பாடல் தற்போது 6 மில்லியன் வியூக்களை கடந்து சாதனை மேற்கொண்டுள்ளது.

இமான் மகிழ்ச்சிப்பதிவு
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் இமான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். பாடலை முகேஷ் முகமது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் ஆகியோர் பாடியுள்ளதையும் பாடல் வரிகளை அருண்பாரதி எழுதியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











