அஜித்துக்கு வில்லனாக விரும்பும் அண்ணாத்த வில்லன்!
சென்னை : அண்ணாத்த படத்தின் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் அபிமன்யூ சிங்.
இவர் மேலும் தீரன் அதிகாரம் ஒன்று, தலைவா மற்றும் ரத்த சரித்திரம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் அடுத்த படம் குறித்த தனது ஆசையை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் அபிமன்யூ சிங்
நடிகர் அபிமன்யூ சிங் மிரட்டலான வில்லத்தனத்தால் கோலிவுட்டில் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் இரண்டு வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷை இவர் படுத்தும் பாட்டால் அண்ணாத்த கோபத்திற்கு உள்ளாவார்.

சிறுத்தை சிவா இயக்கம்
மேலும் படத்தில் மற்றொரு வில்லனாக ஜெகபதி பாபு நடித்திருந்தாலும் அபிமன்யூ சிங்கிற்கே நடிப்பதற்கு அதிக வாய்ப்பு படத்தில் இருந்தது. ரஜினியின் நடிப்பில், மீனா, நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.

சிறப்பான அண்ணாத்த படம்
இந்தப் படத்தில் மட்டுமின்றி முன்னதாக விஜய்யின் தலைவா, சூர்யாவின் ரத்த சரித்திரம் 2 மற்றும் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களிலும் சிறப்பான வில்லத்தனத்தை காட்டியிருந்தார் அபிமன்யூ சிங். ஆயினும் தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த படம் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

சிறப்பான எக்ஸ்பிரஷன்கள்
அண்ணாத்த படத்தில் கோபம், ஆத்திரம், பயம் என இவர் காட்டியிருந்த எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு படத்தின் வெற்றியே ஹீரோவிற்கு டஃப் கொடுக்கும் சிறப்பான வில்லனால் மட்டுமே சாத்தியமாகிறது. அந்த வகையில் மிரட்டலான வில்லத்தனத்தையும் இறுதியில் தனது ஏமாற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் அபிமன்யூ.

அபிமன்யூ மகிழ்ச்சி
அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையிலும் வசூலில் சாதனை புரிந்துள்ளது. 7 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் பெற்றுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அபிமன்யூ, அண்ணாத்த படம் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்று கூறியுள்ளார்.
Recommended Video

அஜித்துடன் நடிக்க விருப்பம்
இந்நிலையில் தான் அடுத்ததாக நடிகர் அஜித்துடன் நடிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஜித் நடிப்பில் தற்போது ஹெச் வினோத் இயக்கியுள்ள வலிமை படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது. இந்நிலையில் கோலிவுட்டின் மிரட்டலான வில்லனான அபிமன்யூ அஜித்துடன் நடிக்கும் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











