சுறுசுறுப்படையும் ‘அண்ணாத்தா‘ ஷூட்டிங் … தனி விமானத்தில் ஹைதராபாத் பறந்தார் சூப்பர் ஸ்டார் !

சென்னை : அண்ணாத்த படப்பிடிப்புக்காக தனிவிமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

நயன்தாரா, குஷ்பு, மீனா,கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 15ந் தேதி முதல் கடந்த 20வது நாட்களாக சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சன்பிக்சர்ஸ்

சன்பிக்சர்ஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஷூட்டிங் நிறுத்தப்பட்டது

ஷூட்டிங் நிறுத்தப்பட்டது

கொரோனா ஊரடங்களால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் டிசம்பர் மாதம் தொடங்கியது.இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத் சென்றனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Recommended Video

D. IMMAN EXCLUSIVE | OTHER LANGUAGE MUSIC ஏன் பண்றதில்ல ? | FILMIBEAT TAMIL
அரசியலுக்கு வரவில்லை

அரசியலுக்கு வரவில்லை

மேலும், ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று பின்னர் சென்னைதிரும்பினார். அப்போது தான் அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த்.

தனி விமானத்தில்

தனி விமானத்தில்

இதையடுத்து, அவரது உடல்நிலை சரியான நிலையில் மார்ச் 15ந் தேதி முதல், சென்னையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது நடிகர்ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X