twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரவு நேர ஊரடங்கால் சிக்கல்.. இரவில் படப்பிடிப்பு நடத்த அரசிடம் அனுமதி கேட்கும் அண்ணாத்த டீம்!

    |

    சென்னை: தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அண்ணாத்த படக்குழு அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

    டிஆர்பி ரேட்டிங்...விஸ்வாசத்தை மிஞ்சிய விஜய்யின் மாஸ்டர் டிஆர்பி ரேட்டிங்...விஸ்வாசத்தை மிஞ்சிய விஜய்யின் மாஸ்டர்

    சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறுத்தப்பட்டது.

    உடல் நலக்குறைவு

    உடல் நலக்குறைவு

    படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

    ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்

    ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்

    இதற்காக படக்குழுவினர் ஹைத்ராபாத் சென்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைத்ராபாத்தில் படமாக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது.

    மக்கள் பீதி

    மக்கள் பீதி

    இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    இரவு நேர ஊரடங்கு

    இரவு நேர ஊரடங்கு

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்ணாத்த ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசிடம் அனுமதி

    அரசிடம் அனுமதி

    அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் சில இரவு நேர காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். ஆனால் அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் அண்ணாத்த படக்குழு இரவு நேர படப்பிடிப்புக்காக தெலுங்கானா அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடுமையான கட்டுப்பாடுகள்

    கடுமையான கட்டுப்பாடுகள்

    அண்ணாத்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பை விரைந்து முடிக்கும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. மேலும் கொரோனா காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளும் படப்பிடிப்பு தளத்தில் பின்பற்றப்படுகிறது.

    செல் போன்களுக்கு தடை

    செல் போன்களுக்கு தடை

    அதோடு படப்பிடிப்பு தளத்தில் இருந்து போட்டோக்கள் கசிவதைத் தடுப்பதிலும் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் செட்டில் மொபைல் போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Annaatthe team seeking permission from Telangana govt for night shoot. Telangana govt has imposed night curfew due to Corona.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X