மருதாணி.. இன்று மாலை வெளியாகிறது.. அண்ணாத்த படத்தின் மூன்றாவது சிங்கிள்! மரண வெய்ட்டிங்கில் ஃபேன்ஸ்!

சென்னை: அண்ணாத்த படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை ரிலீஸ் ஆகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, வேல மூர்த்தி, சூரி, சதீஷ் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர்

படத்தின் டீசர்

இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனை முன்னிட்டு புரமோஷன் பணிகளில் மும்முரமாக உள்ளது படக்குழு. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது.

இன்று மாலை மூன்றாவது சிங்கிள்

இன்று மாலை மூன்றாவது சிங்கிள்

இதில் கிராமத்தான குணமாதானே பார்த்திருக்க கோபப்பட்டு பார்த்ததில்லையே என வசனம் பேசும் ரஜனிகாந்த் வீச்சருவாளுடன் சுற்றி வருகிறார். இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி அண்ணாத்த படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது.

எஸ்பிபி பாடிய பாடல்

எஸ்பிபி பாடிய பாடல்

ஏற்கனவே இந்தப் படத்தின் இரண்டு சிங்கிள் ட்ராக்குகள் வெளியாகியுள்ளன. இதில் படத்தின் ஓபனிங் பாடலான அண்ணாத்த பாடல் முதல் சிங்கிளாக வெளியானது. இந்தப் பாடல் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ரஜினிக்காக பாடிய கடைசி பாடல் ஆகும்.

இரண்டாவது சிங்கிள்

இரண்டாவது சிங்கிள்

இதனை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் வெளியானது. இது நயன்தாராவுக்கும் ரஜினிகாந்துக்கும் இடையேயான ரொமான்டிக் பாடலாக அமைந்தது. சாரக்காற்றே எனத் தொடங்கும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியிருந்தனர்.

Recommended Video

இன்னொரு படையப்பா எதிர்பாக்கலாம் | Annaatthe | PRO Riyaz Ahmed Excluisve interview | Filmibeat Tamil
கீர்த்தி சுரேஷுக்கும் ரஜினிக்கும்

கீர்த்தி சுரேஷுக்கும் ரஜினிக்கும்

இந்நிலையில் இன்று படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் ஆகிறது. இந்தப் பாடல் ரஜினிக்கும் கீர்த்தி சுரேஷுக்குமானது என தெரிகிறது. இந்தப் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X