எதிர்பார்ப்பே இல்லை போல.. அண்ணாத்த மோஷன் போஸ்டருக்கு இவ்ளோ கம்மியா வியூஸ் வர அதுதான் காரணமா?

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டருக்கு குறைந்த அளவிலான வியூஸ் மட்டுமே கிடைத்துள்ளது.

Recommended Video

ரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் 'அண்ணாத்த'! கெத்துதான் போங்க!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் திரைப்படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அதன் எதிரொலியாகவே, தற்போது, அண்ணாத்த படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு, ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சாதாரண சேனலே

சாதாரண யூடியூப் சேனல் வீடியோக்களுக்கே அசால்ட்டா ஒரு மில்லியன் வியூஸ் வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திற்கு முதல் நாளில் வெறும் 4 லட்சமும் தற்போது, 8 லட்சம் வியூஸ் மட்டுமே பெற்றுள்ளது. மேலும், டிரெண்டிங்கில் கூட அண்ணாத்த மோஷன் போஸ்டர் முதலிடம் பிடிக்கவில்லை.

ஃபர்ஸ்ட் லுக்குக்கே

ஃபர்ஸ்ட் லுக்குக்கே

பொதுவாக சமூக வலைதளங்களில், படங்களின் டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் என்று எந்த ஒரு விஷயம் வெளியானாலும், மிகப்பெரிய அளவில் அதனை டிரெண்ட் செய்வதை அந்த நடிகர்களின் ரசிகர்கள் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரை ரஜினி ரசிகர்களே கண்டு கொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது.

கோப்ரா டைட்டில் போஸ்டர்

இதுவெறும், டைட்டில் மோஷன் போஸ்டர் தான், இந்த மோஷன் போஸ்டரில் ரஜினியின் லுக் வெளியாகவில்லை. அப்படி ரஜினியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தால், வேற லெவலில் வியூஸ் இருந்திருக்கும் என்ற பேச்சுக்களும் அடிபடுகின்றன. ஆனால், சமீபத்தில் வெளியான விக்ரமின் கோப்ரா படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ஒரு மில்லியன் வியூக்களை கடந்திருக்கே..

இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸ் மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவி உள்ளது. அதன் காரணமாகத்தான் அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் கூட இல்லை என்பதை இந்த அண்ணாத்த மோஷன் போஸ்டர் தெளிவு படுத்துகிறது.

சன் பிக்சர்ஸ் செய்த தவறு

சன் பிக்சர்ஸ் செய்த தவறு

தலைவர் 168 படத்தின் டைட்டில் அப்டேட் வரப் போகுது, என்ற அறிவிப்பை முன்பே கொடுத்து, ஹைப் க்ரியேட் பண்ணி, ரசிகர்களை ஒன்று திரட்டிய பின்னர், அந்த டைட்டில் மோஷன் போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்தால், நிச்சயம் தர்பார் மோஷன் போஸ்டர் போல, பல மில்லியனை இதுவும் கடந்திருக்கும் என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X