வெளியாகி ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அண்ணாத்த பாடல்!

சென்னை : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸான நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ யோகி பாபு, சூரி என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்து வரும் சூழலில் சமீபத்தில் அண்ணாத்த டைட்டில் பாடல் வெளியாகி வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது

ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ்

ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ்

விஸ்வாசம் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார். கிராமத்து கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

சந்திரமுகி, தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் குஷ்பூ, மீனா,யோகி பாபு, சூரி என பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெரும் நட்சத்திர பட்டாளத்தில் உருவான இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி சக்கை போடு போடுகிறது

சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலிஷான நடிப்பு

சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலிஷான நடிப்பு

அண்ணாத்த ரிலீஸ் ஆகி நான்கே நாட்களில் 100 கோடியை தொட்டு சாதனை படைத்தது இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள தகவலின் படி இப்பொழுது 200 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து கதையுடன் விறுவிறுப்பான திரைக்கதை,ஆக்ஷன் மற்றும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் காட்சிகள் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலிஷான நடிப்பு என படம் முழுவதும் அனைவரையும் ரசிக்க வைக்கின்றது.

அண்ணாத்த வீடியோ பாடல் 1 மில்லியனைத் கடந்து

அண்ணாத்த வீடியோ பாடல் 1 மில்லியனைத் கடந்து

குடும்பங்கள் கொண்டாடும் பக்கா கமர்சியல் திரைப்படமாக வெளியான அண்ணாத்தவிற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தின் டைட்டில் பாடல் வீடியோ பாடல் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் தளத்தில் ஒரே நேரத்தில் வெளியானது. தற்போது யூடியூபில் வெளியாகி ஒரே நாளில் 1 மில்லியனைத் கடந்து அண்ணாத்த பாடல் சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் அண்ணாத்த யூடியூப் தளத்திலும் ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X