அண்ணாத்த டைட்டில் வீடியோ சாங் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சென்னை : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடித்து வெற்றி நடைபோடுகிறது.

ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து எடுக்கப்பட்ட அண்ணாத்த படத்தில் டைட்டில் சாங் வீடியோ வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு பின்னும் படப்பிடிப்பு

கொரோனா பரவலுக்கு பின்னும் படப்பிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ஒரு முறை வெளியாகும் போதும் ஒவ்வொரு சாதனையை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் கொரோனா பரவலுக்கு பின்னும் படப்பிடிப்பு ஒருவழியாக நடத்தி முடிக்கப்பட்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவில்

வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவில்

நான்கே நாட்களில் 100 கோடியை வசூலித்துள்ளதாகவும் இந்த திரைப்படம் மேலும் பல சாதனைகள் புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் குஷ்பு மற்றும் மீனா இதில் ரஜினிகாந்தின் முறைப்பெண்ணாக நடித்துள்ளனர். சிறுத்தை சிவாவின் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவில் உருவான இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் குடும்ப ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

எம் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்

எம் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்

விஸ்வாசம் வெற்றியைத் தொடர்ந்து டி இமான் சிறுத்தை சிவா கூட்டணியில் அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் தனி ரகமாக இருக்க டைட்டில் சாங்கை பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ரஜினிகாந்தின் படங்களில் பெரும்பாலான படங்களுக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் பின்னணி பாடி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் அண்ணாத்த படத்தின் டைட்டில் பாடலையும் எம் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

"அண்ணாத்த அண்ணாத்த" பாடல் வீடியோ

வழக்கமான அண்ணன் தங்கை கதைக்களம் , தெரிந்த திரைக்கதை என பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்து கொண்டு இருந்தாலும் கமர்ஷியல் ரீதியாக இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இன்றுவரை திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் டைட்டில் சாங் "அண்ணாத்த அண்ணாத்த" வீடியோ பாடல் நவம்பர் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X