அண்ணாத்த முதல் நானே வருவேன் வரை... ப்ளூ சட்டை மாறன் பட்டியலிட்ட தோல்விப் படங்கள்
சென்னை: கொரோனாவுக்கு பின்னர் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகின்றன.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப் ஹீரோக்களின் சில படங்கள் மிகப் பெரிய தோல்வியை தழுவின.
அந்தப் படங்களின் பட்டியலை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பட்டியலிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு பின்னர் திரையுலகம்
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திரையரங்குகளின் நிலை மோசமாகும் என கணிக்கப்பட்டது. ஓடிடி தளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வர, சினிமா டிக்கெட் கட்டணங்களால் ரசிகர்களும் பெரிய அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே சின்ன பட்ஜெட் படங்களை தவிர முன்னணி ஹீரோக்களின் படங்கள் அனைத்தும் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகின. இதில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள், நெகட்டிவான விமர்சனங்களுடன மிகப் பெரிய தோல்வியைத் தழுவின. அதேநேரம் இன்னும் சில படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பாக்ஸ் ஆபிஸில் தாறுமாறாக வசூலித்து மாஸ் காட்டின.

ப்ளூ சட்டை மாறனின் பட்டியல்
இந்நிலையில், கோலிவுட்டில் வெளியான முன்னணி நட்சத்திரங்களின் சமீபத்திய தோல்வி படங்களை ப்ளூ சட்டை மாறன் பட்டியலிட்டுள்ளார். சினிமா விமர்சனங்கள் மூலம் பிரபலமான ப்ளூ சட்டை மாறனுக்கு யூடியூப்பில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால், தற்போது அவர் பட்டியலிட்டுள்ள படங்களின் வெற்றி தோல்வி குறித்து நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனர். 2021 பொங்கல் வெளியீடாக ரிலீஸான விஜய்யின் மாஸ்டர், கொரோனாவுக்கு பின்னர் முதல் ப்ளாக் பஸ்டர் படம் எனக் கூறலாம்.

அண்ணாத்த, பீஸ்ட், வலிமை
ப்ளூ சட்டை மாறனின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து ரஜினியின் அண்ணாத்த திரைப்படம். சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியான அண்ணாத்த, மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி, ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியது. நெல்சனை நம்பி மோசம் போன விஜய், அதனை பெரிதாக காட்டிக்கொள்ளாமல் வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். அதேபோல், அஜித்தின் வலிமை படமும் நெட்டிசன்களால் ஓவராக ட்ரோல் செய்யப்பட்டது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணிக்கு இது மறக்க வேண்டிய படமாக அமைந்தது.

சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்
மேலும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய்யின் சினம் ஆகிய படங்களும் ப்ளூ சட்டை மாறனின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் எந்த பலனும் கிடைக்கவில்லை. மேலும், சந்தானத்தின் குலுகுலு, விக்ரமின் கோப்ரா படங்களும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு மொக்கை வாங்கிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, தனுஷின் நானே வருவேன், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளன. திருச்சிற்றம்பலம் ஹிட் கொடுத்த தனுஷ் நானே வருவேன் படத்தில் தடுமாறினார். அதேபோல், டாக்டர், டான் என அடித்து விளையாடிய சிவகர்த்திகேயன், பிரின்ஸ் படத்தில் க்ளீன் போல்டானார்.


Click it and Unblock the Notifications











