சரவெடி சத்தம் அகில உலகம் எங்கும் ஒலிக்க... நாளை மாலை ரிலீஸ் ஆகிறது அண்ணாத்த ட்ரெயிலர்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை ரிலீஸ் ஆகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் நடிகைகள் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, வேல ராம மூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

எஸ்பிபியின் கடைசி பாடல்

எஸ்பிபியின் கடைசி பாடல்

இப்படத்தில் மூன்று சிங்கிள் ட்ராக் ஏற்கனவே ரிலீஸ் ஆகியுள்ளது. முதல் பாடல் ரஜினிக்கான ஓபனிங் பாடலாக உள்ளது. இந்தப் பாடலை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் ரஜினிக்காக அவர் பாடிய கடைசி பாடல் ஆகும்.

மருதாணி பாடல்

மருதாணி பாடல்

இதனை தொடர்ந்து நயன்தாராவுடன் நடிகர் ரஜினிக்காந்த் பாடும் டூயட் பாடல் வெளியானது. சாரக்காற்றே என தொடங்கும் இந்த மெலோடி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மூன்றாவது சிங்கிளாக கீர்த்தி சுரேஷ் உடனான மருதாணி பாடல் வெளியானது. இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்ஷன் காட்சிகள்

ஆக்ஷன் காட்சிகள்

இதனிடையே அண்ணாத்த படத்தின் டீசரும் வெளியானது. இதில் கிராமத்தானை குணமாதான பார்த்திருக்க.. கோபப்பட்டு பார்த்தது இல்லையே என வசனத்திலேயே மிரட்டினார் ரஜினிகாந்த். இதேபோல் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரள விட்டார். டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நாளை மாலை ட்ரெயிலர்

நாளை மாலை ட்ரெயிலர்

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சரவெடி சத்தம் அகில உலகம் எங்கும் ஒலிக்க என குறிப்பிட்டு அண்ணாத்த படத்தின் போஸ்டரை ஷேர் செய்துள்ளது.

வெறித்தனமா வெயிட்டிங்

வெறித்தனமா வெயிட்டிங்

நாளை மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் இப்போதே கொண்டாட தொடங்கி விட்டனர். வா சாமி... இதற்காக தான் வெறித்தனமா வெயிட்டிங் என பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சில வா காளையா வங்க கடலே அலறட்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X