அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க… அண்ணாத்த படத்தின் தரமான அப்டேட்.. மாலை 6 மணிக்கு !
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் குறித்த சூப்பரான ஒரு அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
ஆயுத பூஜை பாண்டியை முன்னிட்டு, ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் விதமாக படக்குழு அப்டேட்டை அறிவித்துள்ளது.
முன்னதாக இப்படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அண்ணாத்த
தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு ரிலீஸ்
தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகிறது. சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 27-ஆம் தேதியோடு நிறைவடைந்தன.

தங்கை ரோலில்
ரஜினிக்கு ஜோடியாக நடித்த குஷ்புவும், மீனாவும் இந்த படத்தில் ரஜினியின் சகோதரிகள் கேரக்டரில் நடித்துள்ளார்களாம். கீர்த்தி சுரேஷ் உடன் ரஜினியின் தங்கை ரோலில் தான் குஷ்புவும், மீனாவும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாடல்கள்
அக்டோபர் 4ந் தேதி அண்ணாத்த திரைப்படத்தில் அண்ணாத்த அண்ணாத்த பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதிலிருந்தது. இந்த பாடலை மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடியிருந்தார். இதையடுத்து, ரஜினி, நயன்தாரா இடையேயான காதலை சொல்லும் பாடலாக சார காற்று பாடல் வெளியானது. இந்த பாடலை சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர்.

டீசர்
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க என்ற வாசகத்துடன் தயாரிப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டீசர் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆயுத பூஜையை முன்னிட்டு படக்குழுவினர் இன்று டீசரை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

முழு கவனத்துடன்
தீபாவளிக்கு இப்படம் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











