அட நம்ம அண்ணாச்சியே சொல்லிட்டார்... விரைவில் தி லெஜண்ட்?: இனி ஆட்டம் அதிரடி தான்!

சென்னை: தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர் அதன் உரிமையாளர் லெஜண்ட் அண்ணாச்சி.

சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரங்களில் நடித்து வந்த அவர், தற்போது சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

அதன்படி அண்ணாச்சி நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படம் பற்றி அண்ணாச்சி தற்போது ட்வீட் செய்துள்ளது ட்ரெண்டாகி வருகிறது.

அவதாரம் எடுத்த அண்ணாச்சி

அவதாரம் எடுத்த அண்ணாச்சி

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் குரூப் உரிமையாளர்களில் ஒருவரான லெஜண்ட் அண்ணாச்சி, தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். தமன்னா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளுடன் ஆட்டம் போட்ட அண்ணாச்சி, அதே ஆசையில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார். பிரம்மாண்டமாக உருவான தி லெஜண்ட் திரைப்படத்தை தயாரித்து அதில், அவரே ஹீரோவாகவும் நடித்து தனது ஆசையை நிறைவேற்றினார்.

பான் இந்தியா படமாக ரிலீஸ்

பான் இந்தியா படமாக ரிலீஸ்

அண்ணாச்சி ஹீரோவாக நடித்த தி லெஜெண்ட் திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தார். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஜேடி - ஜெர்ரி, இந்தப் படத்தின் மேக்கிங்கிலும் பிரமிக்க வைத்திருந்தனர். ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, விவேக், விஜயக்குமார் என பெரிய நட்சத்திரக் கூட்டணியில் இந்தப் படம் உருவானது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் சயின்ட்டிஸ்ட்டாக நடித்த அண்ணாச்சி, ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் காட்சிகளிலும் மாஸ் காட்டினார். பான் இந்தியா படமாக உருவான தி லெஜெண்ட், ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ஹீரோவாக நடித்த அண்ணாச்சியின் துணிச்சலை ரசிகர்கள் பாராட்டி இருந்தனர்.

ஓடிடியில் தி லெஜண்ட்

ஓடிடியில் தி லெஜண்ட்

முன்னதாக தி லெஜண்ட் பட ட்ரெய்லர், 32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திரையரங்குகளில் பெரிய அளவில் சக்சஸ் கொடுக்காத தி லெஜண்ட் சீக்கிரமே ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ஹீரோவான அண்ணாச்சி படத்தை ஓடிடியில் வெளியிட விருப்பம் இல்லை என சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஏன் அண்ணாச்சி இந்த முடிவுக்கு வந்தார் என்ற தகவல்கள் தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

நீங்கள் அனைவரும் காணும் வகையில்

நீங்கள் அனைவரும் காணும் வகையில்

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் லெஜண்ட் அண்ணாச்சி. தனது டிவிட்டர் பக்கத்தில் நீங்கள் அனைவரும் காணும் வகையில் 'தி லெஜண்ட்' விரைவில் என புதிர் போட்டுள்ளார். இதன் மூலம் இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் தி லெஜெண்ட் படத்தை வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஹாட்ஸ்டார் முடிவு செய்துள்ளதால், அண்ணாச்சியும் ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

ரசிகர்களின் விருப்பத்திற்காக தான் தி லெஜெண்ட் படத்தின் ஓடிடி ரைட்ஸை அண்ணாச்சி கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தனது ரசிகர்களுக்காக அண்ணாச்சி எடுத்துள்ள இந்த முடிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்னொரு பக்கம் அண்ணாச்சி தனது அடுத்த படத்திற்காக சில முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். விரைவில் தனது அடுத்த படம் பற்றியும் அண்ணாச்சி அறிவிப்பார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X