»   »  விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' ட்ரெய்லர் அடுத்தவாரம் ரிலீஸ்!

விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' ட்ரெய்லர் அடுத்தவாரம் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் 'அண்ணாதுரை' படம் தயாராகி வருக்கிறது. ஜி.சீனிவாசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விஜய் ஆண்டனி, டயானா நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 11-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

ராதிகா சரத்குமாரின் 'R STUDIOS' நிறுவனமும், விஜய் ஆண்டனியின் 'விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்' நிறுவனமும் இணைந்து 'அண்ணாதுரை' படத்தைத் தயாரிக்கின்றன. 'அண்ணாதுரை' படத்தையடுத்து தற்போது விஜய் ஆண்டனி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காளி' படத்தில் நடித்து வருகிறார்.

Annadurai trailer will be released on October 11th.

'பிச்சைக்காரன்' படத்தின் கமர்ஷியல் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி 'சைத்தான்', 'எமன்' ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே குறிப்பிடும்படியான வெற்றியைப் பெறவில்லை.

இந்தநிலையில் தன்னுடைய நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் 'அண்ணாதுரை' மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி.
தெலுங்கில் 'இந்திரஜித்' என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

English summary
Vijay Antony is doing the movie 'Annadurai' directed by G. Seenivasan. The trailer of the film will be released on October 11th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil