'அண்ணாதுரை' ஜெயிச்சாரா இல்லையா?: ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

சென்னை: அண்ணாதுரை படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, டயானா உள்ளிட்டோர் நடித்த அண்ணாதுரை படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பாத்திமா விஜய் ஆண்டனியும், ராதிகா சரத்குமாரும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.
படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஜய் ஆண்டனி
குடும்ப சென்டிமென்ட் உள்ள நல்ல படம். விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
செஞ்சிட்டாங்க
விஜய் ஆண்டனி நல்லாதனயா நடிச்சிட்டு இருந்த...உனக்கு என்ன ஆச்சு..ஏன் இப்படி ஒரு படம். அண்ணாதுரை செஞ்சிட்டாங்க
படம்
அண்ணாதுரை ட்ரெய்லருக்கும் படத்துக்கும் தொடர்பு இல்லை... முடியல
செம்ம
அண்ணாதுரை படம் பார்க்கிறேன். விஜய் ஆண்டனி சார் பக்கா. வித்தியாசமான நடிப்பு, படம் வேற லெவல். முதல் பாதி ஸ்லோ, இரண்டாம் பாதி வேற லெவல்.5/3
ரத்து
பார்வையாளர்கள் இல்லாததால் அண்ணாதுரை காலை காட்சி இங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆதரவு
அவர் ஏன் அன்புவுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதை அண்ணாதுரை படம் பார்த்த பிறகே புரிந்து கொண்டேன்.


Click it and Unblock the Notifications











