இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியின் இயக்குநர் மோகன் மரணம்

இசைஞானி இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி. இப்படத்தை இயக்கியவர்கள் இரட்டையர்களான தேவராஜ் -மோகன். இந்த இருவரும் இணைந்து ரோஜாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளனர்.
தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் மோகன் நேற்று சென்னையில் தனது வீட்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மரணமடைந்தார். அவருக்கு வயது 81.
மோகனின் வீடு சென்னை டிரஸ்ட்புரத்தில் உள்ளது. பாத்ரூமில் விழுந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அங்கு அவர் மரணமடைந்தார்.
கமலா என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகளும் மோகனுக்கு உள்ளனர். நேற்று அவரது உடல் தகனம் நடைபெற்றது. திரையுலகினர் பலரும் மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Click it and Unblock the Notifications











