twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அண்ணாமலை முதல் தாராள பிரபு வரை.. தமிழில் கலக்கிய டாப் 5 பாலிவுட் ரீமேக் படங்கள்!

    |

    சென்னை: உலகளவில் சூப்பர் ஹிட் ஆகும் படங்கள், மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

    Recommended Video

    Dia movie Remake | Amazon Prime | D Krishna Chaitanya

    ஒரு படத்தை பார்த்து ரொம்ப பிடித்துப் போனாலும், சில இயக்குநர்கள், அதனை நம்ம ஊர் ஸ்டைலில் நம்ம ஊர் ஆடியன்ஸ்க்கு ஏற்றார் போல ரீமேக் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

    பாலிவுட்டில் இருந்து பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி இருந்தாலும், பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற டாப் 5 படங்கள் குறித்து இங்கே காணலாம்.

    அடிக்கடி ஃபாரின் பறக்கும் நடிகை..அழகைக் கூட்ட சர்ஜரி பண்ணியிருக்காராம்..அதனாலதான் அந்த மாற்றமாம்!அடிக்கடி ஃபாரின் பறக்கும் நடிகை..அழகைக் கூட்ட சர்ஜரி பண்ணியிருக்காராம்..அதனாலதான் அந்த மாற்றமாம்!

    அண்ணாமலை

    அண்ணாமலை

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை படம் பாலிவுட்டில் 1987ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த குத்கர்ஸ் (Khudgarz) படத்தின் ரீமேக் தான். பணக்கார நண்பனுக்கும் ஏழை நண்பனுக்கும் இடையே நடக்கும் போட்டியும், ஏழை நண்பன் எப்படி பணக்காரனாக மாறி தனது சவாலில் ஜெயிக்கிறான் என்பதே கதை. ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். நண்பனாக சரத்பாபுவும் அம்மா ரோலில் மனோரமாவும் நடித்திருந்தனர்.

    ஒஸ்தி

    ஒஸ்தி

    தில், தூள், கில்லி, குருவி என தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் தரணி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான ஒஸ்தி படம், இந்தியில் சல்மான் கான் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்த தபங் படத்தின் ரீமேக். சிம்பு, ரிச்சா கங்கோபாத்யாய், சோனு சூட், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோ நடிப்பில் வெளியான அந்த படத்தில் ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரி ஒஸ்தி வேலனாக சிம்பு நடித்திருப்பார். 2010 முதல் 2020 வரை தபங் 1, 2 மற்றும் 3 என மூன்று பாகங்களில் சல்மான் கான் நடித்துள்ள நிலையில், ஒஸ்தி படத்துடன் சிம்பு அதனை தொடரவில்லை.

    நண்பன்

    நண்பன்

    ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், மாதவன், கரீனா கபூர் நடிப்பில் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் 3 இடியட்ஸ். அந்த படத்தை தளபதி விஜய்யை வைத்து ரீமேக் செய்து நண்பன் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் ஷங்கர். ஆனால், விஜய்க்கும், ரசிகர்களுக்கும் ஷங்கர் ஸ்டைல் படம் ஒன்றில் விஜய் நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருக்கிறது.

    நேர்கொண்ட பார்வை

    நேர்கொண்ட பார்வை

    சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பரத் சுப்ரமணியம் எனும் வழக்கறிஞராக நடிகர் அஜித் சொல்லும் நோ மீன்ஸ் நோ வசனம் தமிழகத்தின் மூலை முடுக்கு எங்கிலும் ஒலித்ததே அந்த படத்தின் வெற்றி.

    தாராள பிரபு

    தாராள பிரபு

    இந்த வரிசையில் கடைசியாக, லாக் டவுனுக்கு சற்று முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்த படம் தான் ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு. தியேட்டர்கள் மூடப்பட்டதால், அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்திற்கு எக்கச்சக்க ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆயுஷ்மான் குரானா கடந்த 2012ம் ஆண்டு அறிமுகமான விக்கி டோனர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப் நடிப்பில் உருவான இந்த படத்தில் நடிகர் விவேக்கின் நடிப்பு பலரையும் கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Films as iconic as 'Annamalai' to 'Dharala Prabhu' are Tamil remakes of Hindi films and they did great at the box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X