சமகால அரசியலை நையாண்டி செய்யும் 'அண்ணனுக்கு ஜே'... ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சமகால அரசியலை நையாண்டி செய்யும் 'அண்ணனுக்கு ஜே' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் தினேஷ் நடித்துள்ள அண்ணனுக்கு ஜே திரைப்படம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், 20th சென்சுரி ஃபாக்ஸ் Fox நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் அண்ணனுக்கு ஜே. வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தற்கால அரசியலை நையாண்டி செய்யும் இந்த திரைப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரோல் கொரேலி படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பொறுப்பை விஷ்ணு ரங்கசாமியும், படத்தொகுப்பை ஜி.பி.வெங்கடேஷூம் ஏற்றுள்ளனர்.
"அண்ணனுக்கு ஜே" ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் தினேஷூக்கு சமீபத்தில் வெற்றிப்படங்கள் ஏதும் அமையாததால், அண்ணனுக்கு ஜே படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்


Click it and Unblock the Notifications











