Annapoorani OTT Release: நயன்தாராவுக்கு வந்த சோதனையா இது... ஓடிடியில் வெளியாகும் அன்னபூரணி!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடியாக நடிக்கிறார். இல்லை என்றால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி அவர் லீடிங் ரோலில் நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

அன்னபூரணி ஓடிடி ரிலீஸ் தேதி
சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் மூலம் நாயகியாக சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. குறுகிய காலத்திலேயே கோலிவுட்டின் டாப் ஹீரோயினாக வலம் வரத் தொடங்கிய நயன், இப்போது பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார். அதேபோல் தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் எனவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

 Annapoorani OTT Release Date: Nayantharas Annapoorani will be streaming from Dec 29 on Netflix

சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, ஷாருக்கான் என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் நயன். இந்நிலையில் கடந்தாண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன், ஒருபக்கம் பிஸ்னஸிலும் மாஸ் காட்டி வருகிறார். இதனிடையே அவர் நடிப்பில் சமீபத்தில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகியிருந்தது.

நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்த அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார், தமன் இசையமைத்திருந்தார். ராஜா ராணி படத்துக்குப் பின்னர் நயன் - ஜெய் ஜோடி இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உணவு, சமையல் கலையை பின்னணியாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்தார் நிலேஷ் கிருஷ்ணா.

விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பைப் பெற்ற அன்னபூரணி, பாக்ஸ் ஆபிஸில் தடுமாறியது. இதனால் நயன்தாராவுக்கு முன்பைப் போல மார்க்கெட் இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இனிமேல் நயன் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்காது என்றும் செய்திகள் வெளியாகின. அதேநேரம் நயன் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விக்கியுடன் ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.

சமீபத்தில் நயன்தாராவுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய பென்ஸ் காரையும் பரிசாக கொடுத்திருந்தார் விக்கி. இந்நிலையில் அன்னபூரணி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X