லைஃப்பை தொலச்சிட்டியேப்பா!.. புது படங்களுக்கு விபூதி அடிச்ச மிக்ஜாம் புயல்.. வசூலுக்கு விழுந்த இடி!

சென்னை: இந்த வாரம் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் தமிழ்நாட்டில் வெளியான படங்களின் நிலைமை மிக்ஜம் புயல் காரணமாக சிக்கி சின்னா பின்னமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னணி நடிகர்கள் படங்கள் இல்லையென்றாலே வர வர தியேட்டர் பக்கம் ரசிகர்கள் தலைவைத்து அல்ல மழைக்கு கூட ஒதுங்க மாட்டேன் என்கின்றனர்.

Annapoorani, Parking movie box office struggles due to Mick Jam Cyclone

இந்த வாரம் பாலிவுட் படமான அனிமல் மற்ற பகுதிகளில் வசூல் வேட்டை ஆடி வந்தாலும் தமிழில் அதன் நிலைமை ரொம்பவே மோசம் தான். நயன்தாராவின் அன்னபூரணி, ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் உள்ளிட்ட புதிய படங்களும் ஞாயிற்றுக்கிழமை வசூல் அள்ளலாம் என நினைத்த நிலையில், அதற்கு புயல் ஆப்பு அடித்து விட்டது.

மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் சும்மா மிக்ஜாம் புயல் வெளுத்து வாங்கி வருகிறது. சனிக்கிழமை முதலே மழை விடாமல் பிடித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு யாராவது வெளியே வருவீங்களா என சும்மா ரவுடி போல மிரட்டி வருகிறது. நாளைக்கும் தியேட்டர்கள் பக்கம் மக்கள் செல்வது முடியாது பாஸ் என்கிற நிலைமை தான் உள்ளது. வார நாட்களில் நல்ல நாளிலேயே நாயகம் என்பது போல நிலைமை படுத்தே விடும் என தெரிகிறது.

அடைமழையில் அன்னபூரணி: நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தை எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் இந்த வாரம் வெளியிட்டு மிகப்பெரிய தவறை படக்குழுவினர் செய்து விட்டனர் என்றும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் குவிந்து வந்தாலும், ஃபேமிலி என்ட்ர்டெயினர் படமாக சன் டே வசூலை ஈட்டியிருக்கும். ஆனால், அதற்கும் எண்ட் கார்டு போட்டு விட்டது புயல்

பார்க்கிங் ஃபுல்லா மூழ்கிடுச்சு: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி பாராட்டுக்களை பெற்றுள்ள பார்க்கிங் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கல்லா கட்டும் என்று பார்த்தால் பார்க்கிங் ஏரியாவே பல இடங்களில் மூழ்கிவிடும் அளவில் மழை கொட்டி வருகிறது. அடுத்த வாரம் மழை குறைந்தால் தான் இந்த படங்கள் எதிர்பார்த்த வசூலை ஈட்டும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X