இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 5 படங்கள்.. வசூலை அள்ள போகும் படம் எது?

சென்னை: தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் படங்கள் வெளியாகின. அதில் சூர்யா, எஸ்.ஜே சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வசூலை அள்ளியது.

அந்த படத்தின் வசூலை முறியடிக்க போனவாரம் எந்தபடமும் வெளியாகாத நிலையில், இந்த வாரம், பல திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

Annapoorani to parking 5 films releasing in theatres

அன்னபூரணி: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி வரும் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லீ, கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகை ரேணுகா, பூர்ணிமா ரவி என பலர் நடித்துள்ளனர். சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

பார்க்கிங்: கார் பார்க்கிங் பஞ்சாயத்து சம்பவத்தை வைத்து ஹரிஷ் கல்யாண் - எம். எஸ். பாஸ்கர் இருவரையும் வைத்து, தரமான சம்பவம் செய்திருக்கிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அதாவது டிசம்பர் 1ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

Annapoorani to parking 5 films releasing in theatres

அனிமல்: இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இந்தப்படம், டிசம்பர் 1ந் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது.

நாடு: எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர் சரவணன் இயக்கியுள்ள நாடு திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இப்படத்தில், பிக் பாஸ் தர்ஷன் மற்றும் நடிகை மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர்.

Annapoorani to parking 5 films releasing in theatres

வா வரலாம் வா: பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள வா வரலாம் வா திரைப்படம் டிசம்பர்.1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில் கருமேகங்கள் கலைகின்றன பட நாயகி மஹானா சஞ்சீவி கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லனாக மைம் கோபி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X