என்னாது பொங்கலுக்கா... அண்ணாத்த போஸ்டரை கிண்டல் அடித்த நெட்டிசன்கள் !

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த பட போஸ்டரை பார்த்து நக்கலடித்து மீம்ஸ் போட்ட நெட்டிசன்ஸ்

Recommended Video

Annathe Release Date Announced | Nasser Kabadadhari Dubbing, Master Post Production Starts

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் "அண்ணாத்த" இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ் ,பிரகாஷ்ராஜ் ,சூரி ,சதீஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

 Annatha poster memes

இப்படத்தின் மோஷன் போஸ்டர்ஸ் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. பட வேலைகள் முடிந்த நிலையில் இந்த வருடமே இப்படம் வெளிவரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருந்த நிலையில், கொரோனா காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது .

கொரோனா பாதிப்பு அனைத்து துறையினரையும் வெகுவாக பாதித்து விட்டது, அதிலும் மக்களுக்கு பொழுது போக்கான சினிமா துறை முற்றிலும் முடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அனைத்து சினிமா சார்ந்த வேலைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகளுக்கு மட்டும் அனுமதி தந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அரசு ஊரடங்கை நீடித்து கொண்டே இருக்கிறது. அதனால் வீட்டில் மக்களும் மிகவும் விரக்தியாகவே இருக்கிறார்கள், என்ன நடக்குமோ என்ற பயமும்,எண்ணமும் அனைவரிடத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

 Annatha poster memes

இந்நிலையில் மக்களின் இடையே மிகவும் எதிர்பார்த்த "அண்ணாத்த "படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடுப்பில் இருக்கின்றனர் சில நெட்டிசன்ஸ் .

இதை பார்த்த நெட்டிசன்ஸ் பட போஸ்டரை கலாய்த்து கொண்டே இருக்கின்றனர். மீம்ஸ் ஆகவும், ட்ரோல் வீடியோக்களாகவும் போட்டு நக்கலடித்து கொண்டு இருக்கின்றனர். "நாடு இருக்க நிலைமையை பாத்த நாளைக்கு உயிரோட இருப்போமானு தெரில அதுக்குள்ள இது ரொம்ப முக்கியம் என்று நக்கலடித்து உள்ளனர் "

 Annatha poster memes

ரஜினி,கவுண்டமணி இணைத்து நடித்த மன்னன் படம் பெரும் அளவில் வெற்றி பெற்றது அதனால், மன்னன் பட படங்களை போட்டு மீம்ஸ் போட்டு உள்ளனர். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள், கவுண்டமணி பாணியில் ஏன்டா எங்கள இப்படி கலாய்யக்கிறீங்க என்று கேட்டு கொண்டே இருக்கின்றனர் . ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் அண்ணாத்த படம் ரிலீஸ்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X