அண்ணாத்த படக்குழுவினர் கைத்தட்டி பாராட்டு..நெகிழ்ந்து போன இமான்!
சென்னை : தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி இமானை அண்ணாத்த படக்குழுவினர் வெகுவாக பாராட்டினர்.
67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் 7 விருதுகள் கிடைத்துள்ளன.
அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றிமாறனுக்கும் கிடைத்துள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி இமானுக்கு வழங்கப்பட்டது.

2 தேசிய விருது
2019ம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷ் இருவேடங்களில் நடித்திருப்பார். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷூக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றி மாறனுக்கும் கிடைத்துள்ளது.

டி இமான் சிறந்த இசையமைப்பாளர்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்த திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அப்பா மகள் பாச போராட்டம் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளமாக இடம் பெற்று இருந்தன. டி இமானின் இசையில் தாமரை வரிகளில் சித் ஸ்ரீராமின் மாயக்குரலில் அனைவரின் மனதை கொள்ளை கொண்ட கண்ணான கண்ணே பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி இமானுக்கு கிடைத்துள்ளது.

2 விருது
இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் மட்டுமே நடித்து அவரே இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும். சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது ரசூல் பூக்குட்டிக்கும் கிடைத்துள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

நெகிழ்ந்து போன இமான்
விருது பெற்றவர்களை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திற்கும் டி இமான் இசை அமைத்து வருகிறார். அவர் இசையமைத்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதைக்காண இமான் வந்த போது, ராஜினிகாந்த் இமானுக்கு விருது கிடைத்ததை மைக்கில் அறிவிக்க சொல்லி படக்குழுவினரை கைத்தட்டி பாராட்டும்படி கேட்டுக்கொண்டார் இதனால் இமான் நெகிழ்ந்து போனார்.


Click it and Unblock the Notifications











