தீவிர பாதுகாப்புடன் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு.. சூப்பர் ஸ்டாரிடம் யாருக்கும் அனுமதி இல்லையாம்!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார்.
தற்போது ஹைதராபாத்தில் தீவிர பாதுகாப்புடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தள்ளிப்போன ரிலீஸ்
2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவர வேண்டிய அண்ணாத்த திரைப்படம் பல இன்னல்களை சந்தித்து இதுவரை வெளிவராமல் உள்ளது. படக்குழு 2021ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது.

அரசியல் களம்
கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு படகுழுவினர் சிலருக்கு கொரோனா ஏற்பட்ட காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி ரஜினியின் அரசியல் களம் குறித்த முடிவு, உடல் நிலையை கருத்திற்கொண்டு படப்பிடிப்பை படக்குழு மீண்டும் தள்ளி
போட முடிவு செய்தது

2 வார படப்பிடிப்பு
இதையடுத்து சமீபத்தில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்து விட்டார். ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இடைவெளி இல்லாமல் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்துவருகிறது.

தனிமையில் உள்ளார்
படப்பிடிப்பின் போது ரஜினியிடம் நெருங்க யாருக்கும் அனுமதி இல்லையாம். படப்பிடிப்பில் அனைவருக்கும் PPE suit கொடுக்கப்பட்டுள்ளதாம். தயாரிப்பு நிறுவனமும் , இயக்குனரும் சேர்ந்து சூப்பர் ஸ்டாரை குழந்தையை பார்த்து கொள்ளுவது போல கவனித்து கொள்கிறார்களாம். இயக்குனர் சிவாவும் 4 - 5 அடி தொலைவில் நின்று தான் ரஜினியிடம் பேசுகிறாராம். இவ்வாறாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படக்குழு மே10ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











