அண்ணாத்தே படத்தோட பாட்ட கேக்க ரெடியா மக்களே... இன்னிக்கு ரிலீஸ்
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள படம் அண்ணாத்தே.
படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் படத்தில் முதல் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்தே
சூப்பர்ஸ்டார் படம் என்றாலே ரசிகர்களுக்கு தனியான குஷி வந்துவிடும். அதிலும் அவரது படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது திருவிழாவாக அமையும். அந்தவகையில் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள படம் அண்ணாத்தே. இந்தப் படம் நவம்பர் 4ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது.

எஸ்பிபியின் பாடல்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்தில் உள்ளாகியது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் இமான். மேலும் சமீபத்தில் மறைந்த எஸ்பிபியின் குரலில் இந்தப் படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் கதை குறித்து பல்வேறு யூகங்கள் இணையதளத்தில் உலவி வருகின்றன. சிறுத்தை சிவா முதல் முறையாக சூப்பர்ஸ்டாருடன் இணைந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
To the combo that gave us goosebumps every single time!
— Sun Pictures (sunpictures) October 4, 2021
Thiru #SPB - Superstar Rajinikanth ❤#AnnaattheFirstSingle releasing Today 6PMrajinikanth directorsiva #Nayanthara KeerthyOfficial immancomposer Viveka_Lyrics AntonyLRuben vetrivisuals #PremRakshith #Annaatthe pic.twitter.com/LAwa1uRk2e
முதல் பாடல் வெளியீடு
இந்நிலையில் எஸ்பிபி குரலில் உருவாகியுள்ள படத்தின் ஒரு பாடலை இன்றைய தினம் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இதையொட்டி இன்று மாலை 6 மணியளவில் அந்த பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் -எஸ்பிபி கூட்டணி
மேலும் எஸ்பிபி -சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் அமையும் பாடல்கள் எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. படத்தின் முதல் பாடலாக இந்தப் பாடலை இன்றைய தினம் வெளியிட உள்ளது சன் பிக்சர்ஸ். இந்தப் பாடல் எஸ்பிபியின் நினைவை போற்றும் வண்ணம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











