அண்ணாத்த பேசுனா ஸ்டைலு.... அதிரடி சரவெடியாக வெளிவந்துள்ள சூப்பர்ஸ்டார் பாடல்

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள படம் அண்ணாத்த.

படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் படத்தில் முதல் பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி சரவெடியாக ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை இந்தப் பாடல் கொடுத்துள்ளது.

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த

சூப்பர்ஸ்டார் படம் என்றாலே ரசிகர்களுக்கு தனியான குஷி வந்துவிடும். அதிலும் அவரது படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது திருவிழாவாக அமையும். அந்தவகையில் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள படம் அண்ணாத்த. இந்தப் படம் நவம்பர் 4ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது.

எஸ்பிபியின் பாடல்

எஸ்பிபியின் பாடல்

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் இமான். மேலும் சமீபத்தில் மறைந்த எஸ்பிபியின் குரலில் இந்தப் படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் கதை குறித்து பல்வேறு யூகங்கள் இணையதளத்தில் உலவி வருகின்றன. சிறுத்தை சிவா முதல் முறையாக சூப்பர்ஸ்டாருடன் இணைந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

முதல் பாடல் வெளியீடு

முதல் பாடல் வெளியீடு

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி குரலில் உருவாகியுள்ள படத்தின் டைட்டில் பாடலை படக்குழுவினர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர். இன்று மாலை 6 மணியளவில் அந்த பாடலை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் -எஸ்பிபி கூட்டணி

சூப்பர்ஸ்டார் -எஸ்பிபி கூட்டணி

எஸ்பிபி -சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் அமையும் பாடல்கள் எப்போதும் பட்டையை கிளப்பும். இந்தப் பாடலும் அதிரடி சரவடியாக அமைந்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டத்தை இந்தப் பாடல் கொடுத்துள்ளது. வீடியோவின் முதலில் எஸ்பிபிக்கு வணக்கத்தை தெரிவிக்கவும் படக்குழு மறக்கவில்லை.

லிரிக் வீடியோ பாடல்

லிரிக் வீடியோ பாடல்

லிரிக் வீடியோவாக பாடல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் சிறப்பான ஸ்டில்களுடன் எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் பாடல் அமைந்துள்ளது. பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். அண்ணாத்த பாடுனா ஸ்டைலு, பேசுனா ஸ்டைலு என்ற வரிகள் சிறப்பாக அமைந்துள்ளது.

கூண்டுல புலிக்கு வேலையில்லை

கூண்டுல புலிக்கு வேலையில்லை

கூண்டுல புலிக்கு வேலையில்லை வெளியில் வா கடமைகள் காத்திருக்கு என்ற வரிகளும் சிறப்பாக உள்ளது. திருவிழா பின்னணியில் பாடல் அமைந்துள்ளது. மேலும் பாடல் முழுமையும் சூப்பர்ஸ்டார் வேட்டி சட்டையில் சிறப்பாக காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X