தெலுங்கில் சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த... சூப்பர் போஸ்டர் வெளியீடு

ஐதராபாத் : சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி உலகளவில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படம் தெலுங்கிலும் ரிலீசாக உள்ள நிலையில் படத்திற்கு பெத்தண்ணா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டாரின் நடிப்பில் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி உலகளவில் ரிலீசாக உள்ளது. படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் தீபாவளிக் கொண்டாட்டமாக படம் வெளியாக உள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டம்

தீபாவளிக் கொண்டாட்டம்

ரஜினியின் படங்கள் பெரும்பாலும் தீபாவளிக் கொண்டாட்டமாகவே ரிலீசாகும். மக்களும் தங்களுடைய பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு சூப்பர்ஸ்டாரின் படத்தையும் பார்த்து பண்டிகையை நிறைவாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் தற்போது அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

இமான் இசை

இமான் இசை

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக முதல் பாடலை மறைந்த எஸ்பிபி பாடியுள்ளார். டைட்டில் பாடலை சூப்பர்ஸ்டாருக்கு அவர் பாடுவது சிறப்பாக அமையும். அந்தவகையில் இந்தப் பாடலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

டீசர் வெளியீடு

டீசர் வெளியீடு

தொடர்ந்து ரஜினி மற்றும் நயன்தாரா இணைந்து பாடிய மெலடி பாடலும் இரண்டாவதாக வெளியானது. லிரிக் வீடியோவாக இந்தப் பாடல் வெளியான போதிலும், அதில் இடம்பெற்றிருந்த போஸ்டர்களின்மூலம் இளமையான ரஜினியை பார்க்க முடிந்தது. நேற்றைய தினம் படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கில் அண்ணாத்த படம்

தெலுங்கில் அண்ணாத்த படம்

படத்தில் நான்கு நாயகிகள் இடம்பெற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அண்ணாத்த படம் ரிலீசாகவுள்ள அதே நாளில் தெலுங்கிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

 தெலுங்கில் பெத்தண்ணா

தெலுங்கில் பெத்தண்ணா

தெலுங்கில் பெத்தண்ணா என்ற பெயரில் படம் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இன்றைய தினம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளும் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளதாகவும் படம் ரிலீசுக்கு தயாராக ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டர் வெளியீடு

போஸ்டர் வெளியீடு

படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் தெலுங்கிலும் இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் படத்தை ப்ரமோட் செய்யும்வகையில் தற்போது படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X