அஜித், விஜய் ஆண்டனி படத்தை முந்தாத அண்ணாத்த டிஆர்பி.. ஆனால், மாஸ்டரை சம்பவம் செய்து விட்டது!

சென்னை: 2021ம் ஆண்டு வெளியான படங்களிலேயே டிவியில் ஒளிபரப்பாகி அதிக டிஆர்பி ரேட்டிங்கை அள்ளி முதல் இடத்தில் உள்ளது ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட அண்ணத்த திரைப்படம் டிஆர்பியில் மாஸ் காட்டியுள்ளது.

பொங்கல் பிரீமியர்

பொங்கல் பிரீமியர்

தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளங்களில் வெளியான நிலையில், கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் சிறப்புத் திரைப்படமாக சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக டிஆர்பி ரேட்டிங்கை அண்ணாத்த குவித்துள்ளது.

அண்ணாத்த டிஆர்பி

அண்ணாத்த டிஆர்பி

சன் டிவியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட அண்ணாத்த திரைப்படம் 17.37 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதாவது 1.7 கோடி பேர் அண்ணாத்த படத்தை அன்றைய தினம் பார்த்துள்ளனர். 21.60 டிவிஆர் ரேட்டிங்கையும் அண்ணாத்த திரைப்படம் பெற்றுள்ளது.

மாஸ்டரை வீழ்த்தியது

மாஸ்டரை வீழ்த்தியது

கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் சன் டிவியில் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், அந்த படம் 13.755 மில்லியன் இம்ப்ரஷன்களை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியாக விஜய்யின் பிகில் திரைப்படம் 16.93 மில்லியன் இம்ப்ரஷன்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் அஜித் படம்

முதலிடத்தில் அஜித் படம்

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகி 17.69 மில்லியன் இம்ப்ரஷன்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு வெளியான நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் அந்த ரெக்கார்ட்டை வீழ்த்தி 18.14 மில்லியன் இம்ப்ரஷன்களை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்தின் புதிய படமான அண்ணாத்த திரைப்படம் கூட இன்னமும் அஜித்தின் விஸ்வாசம் படத்தை பீட் பண்ண முடியவில்லை.

Recommended Video

Annaatthe Review | Annatha Review by Poster Pakiri | Superstar Rajinikanth | Siva | Filmibeat Tamil
வசூல் வேட்டை

வசூல் வேட்டை

விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் பெற்றாலும் வசூல் ரீதியாக எந்தவொரு குறையும் இல்லை என்று ஏகப்பட்ட திரையரங்க உரிமையாளர்களே அதிகாரப்பூர்வ ரிப்போர்ட்களை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டு இருந்தனர். அடுத்த படத்தை விரைவிலேயே துவங்கும் வேலைகளை நடிகர் ரஜினிகாந்த் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X