”என்ன ஒரு எனர்ஜி.. அதுதான் ரஜினி”; சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த ஒளிப்பதிவாளர்.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இறுதிக்கட்டத்தில்

இறுதிக்கட்டத்தில்

ஆனால், இன்னமும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருப்பதால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படம் வெளியாகுமா? அல்லது பொங்கலுக்கு தள்ளிப் போகுமா? என்பது உறுதியாக தெரியவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.

விஸ்வாசம் தந்த நம்பிக்கை

விஸ்வாசம் தந்த நம்பிக்கை

நடிகர் கார்த்தியை வைத்து சிவா இயக்கிய சிறுத்தை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக தல அஜித்தின் வீரம் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களில் சிவாவுடன் நடிகர் அஜித் கூட்டணி வைத்தார். விஸ்வாசம் படத்தின் மெகா பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்க ஆரம்பித்தார் இயக்குநர் சிவா.

அமெரிக்க பயணம்

அமெரிக்க பயணம்

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடிக்கடி கொரோனா பரவல் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலக் குறைவு காரணமாக தடைப்பட்டு வந்தது. சிகிச்சைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா பறந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கே உள்ள மயோ கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பி அதே வேகத்தில் அண்ணாத்த படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

கொல்கத்தாவில்

கொல்கத்தாவில்

அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் வேலாயுதம், தீரன் அதிகாரம் ஒன்று, தலைவா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அபிமன்யு சிங் அண்ணாத்த படத்தில் இணைந்தார். வட மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் சண்டைக் காட்சிகளில் அவர் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

நடிகர்கள் பட்டாளம்

நடிகர்கள் பட்டாளம்

சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஒவ்வொரு ஃபிரேமுக்கும் ஒரு நூறு பேராவது இருப்பார்கள். அதே போலத் தான் அண்ணாத்த படத்தில் முக்கியமான நடிகர்களே ஒரு 20க்கும் மேற்பட்டவர்கள் நடித்து வரும் நிலையில், நிச்சயம் திரையில் ரசிகர்களுக்கு செம விருந்தாகாவே அண்ணாத்த இருக்கும். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இதில் உள்ளது.

Recommended Video

D. Imman மீண்டும் மக்கள் மனதில் நின்றுவிட்டார் | மாற்றுத்திறனாளிக்கு படத்தில் பாட வாய்ப்பு
அண்ணாத்த ஒளிப்பதிவாளர்

அண்ணாத்த ஒளிப்பதிவாளர்

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜ்னிகாந்த் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் எனர்ஜி அப்படியே இருக்கே என வியந்து பாராட்டி வருகின்றனர்.

ஷூட் ஓவரா

ஷூட் ஓவரா

அண்ணாத்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி ரஜினிகாந்த் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், அண்ணாத்த ஷூட்டிங் முழுவதுமாக முடிவடைந்து விட்டதா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே வெறும் 10 நாள் ஷூட்டிங் மட்டும் தான் பாக்கி என சொல்லப் பட்ட நிலையில், சீக்கிரமே அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பட ரிலீஸ் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X