வேற லெவல் அப்டேட்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வரும் தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள்

அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள்

வரும் திங்கட் கிழமை அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

எஸ்.பி.பியின் கடைசி பாடல்

எஸ்.பி.பியின் கடைசி பாடல்

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் இன்ட்ரோ பாடல் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் திங்கட் கிழமை வெளியாகிறது.

இமான் இசையில்

இமான் இசையில்

ரஜினியின் இன்ட்ரோ பாடல்களை பல முறை பாடி அசத்திய எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் அண்ணாத்த படத்தின் ஓப்பனிங் பாடலையும் பாட வேண்டும் என முடிவு செய்த இசையமைப்பாளர் இமான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை பாட வைத்த அந்த புகைப்படங்களை ஏற்கனவே அவரது நினைவாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்த நிலையில், விரைவில் ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தாக அந்த பாடல் வெளியாக காத்திருக்கிறது.

சும்மா கிழி

சும்மா கிழி

கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் தர்பார் உள்ளிட்ட படங்களை இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரஜினியின் இண்ட்ரோ பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை வைத்து பாட வைத்த நிலையில், இசையமைப்பாளர் இமானும் இன்னொரு சும்மா கிழி சம்பவத்தை அரங்கேற்ற காத்திருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றும் கிறிஸ்துமஸ் ரிலீஸை குறிவைத்து பின் வாங்கப் போவதாகவும் வெளியான சில வதந்திகளுக்கு அதிரடி முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் இந்த அப்டேட்டிலும் நவம்பர் 4ம் தேதி என்கிற அறிவிப்பை அழுத்தம் திருத்தமாக பதிவிட்டுள்ளது.

சூர்யா படமும் வருது

சூர்யா படமும் வருது

வரும் தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது. அதனை குறிக்கும் விதமாகவே அக்டோபர் 4ம் தேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியாகிறது. அண்ணாத்த, ஜெய் பீம், மாநாடு மற்றும் வா டீல் என 4 படங்கள் இதுவரை தீபாவளி ரேசில் கலந்து கொள்ள காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X