அண்ணாத்த படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை மாலை ரிலீஸ்.... படக்குழு அசத்தல் அறிவிப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை மாலை ரிலீஸ் ஆகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, வேல மூர்த்தி, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதியான தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

நாளை மாலை 6 மணிக்கு

நாளை மாலை 6 மணிக்கு

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை மாலை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயா கோஷல் குரலில் உருவாகியுள்ள சாரக்காற்றே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஊஞ்சலில் ரஜினியுடன் நயன்

ஊஞ்சலில் ரஜினியுடன் நயன்

இதற்கான போஸ்டரில் நடிகை நயன்தாராவும் ரஜினிகாந்தும் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதாக உள்ளது. அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. 'அண்ணாத்த அண்ணாத்த.. அண்ணாத்த பேசுனா ஸ்டைலு என்ற இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலச்சுப்பிரமணியம் பாடியிருந்தார்.

நாளை மாலை இரண்டாவது சிங்கிள்

நாளை மாலை இரண்டாவது சிங்கிள்

இந்தப் பாடல் ரஜினிக்காக எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி பாடல் ஆகும். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வியூஸ்களையும் குவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை மாலை வெளியாகிறது.

ரொமான்டிக் பாடலாக இருக்கும்

ரொமான்டிக் பாடலாக இருக்கும்

இதனை இப்போதே கொண்டாட தொடங்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள். இந்த பாடல் படு ரொமான்ஸ் பாடலாக இருக்கும் என்பது இதன் போஸ்டரிலேயே தெரிகிறது. மேலும் பலர் இது ஒரு மெலடி பாடலாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X