twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா நெகட்டிவ்.. 4 பேருக்கு கொரோனா பரவியதால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தம்

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    அண்ணாத்த படக்குழுவில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் அதிரடியாக ஷூட்டிங்கை நிறுத்தி உள்ளது.

    நடிகர் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என தகவல் கிடைத்துள்ளது.

    மீண்டும் ரேங்க் டாஸ்க்.. இதுக்கு பேர்தாங்க கார்னர்.. ஆரியை அட்டாக் பண்ணும் ரியோ.. அதகள புரமோ!மீண்டும் ரேங்க் டாஸ்க்.. இதுக்கு பேர்தாங்க கார்னர்.. ஆரியை அட்டாக் பண்ணும் ரியோ.. அதகள புரமோ!

    மீண்டும் தலைதூக்கும் கொரோனா

    மீண்டும் தலைதூக்கும் கொரோனா

    கொரோனா பாதிப்பு சற்றே குறைந்த நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. கோலிவுட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஏகப்பட்ட படக்குழு ஹைதராபாத்துக்கு படையெடுத்து ஷூட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருப்பது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

    ஷூட்டிங் நிறுத்தம்

    ஷூட்டிங் நிறுத்தம்

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஆரம்பமான அண்ணாத்த படப்பிடிப்பு, கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    ரஜினி கோரிக்கை

    ரஜினி கோரிக்கை

    நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு 2020ம் ஆண்டு முடியும் வரை அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கக் கூடாது என தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அரசியல் என்ட்ரிக்காக அண்ணாத்த படத்தை சீக்கிரமே முடிக்க வேண்டிய நிலையில், கடந்த வாரம் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது.

    8 பேருக்கு கொரோனா

    8 பேருக்கு கொரோனா

    அண்ணாத்த படத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக தற்போது சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ரஜினிக்கு நெகட்டிவ்

    ரஜினிக்கு நெகட்டிவ்

    நடிகர் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் உள்ளிட்ட அண்ணாத்த படக்குழுவினர் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளனர். அண்ணாத்த படத்தின் படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கும் மற்ற படக்குழுவினரும் பதட்டத்தில் உள்ளனர்.

    படக்குழுவிடம் விசாரணை

    படக்குழுவிடம் விசாரணை

    கடும் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் கடந்த டிசம்பர் 14ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், படக்குழுவில் பணியாற்றிய ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த படக்குழுவையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கட்டுப்பாட்டுக்களை மீறியவர்கள் யார் என்கிற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடிகர்கள் யாருக்காவது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்கிற தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    English summary
    Rajinikath tested Corona Negative; Annatthe Shooting stopped after 4 members of the crew affected by Corona.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X