அய்யய்யோ.. ஆயுத பூஜைக்கு அந்த படமும் வருதா.. என்ன செய்யப்போறாரோ அண்ணாத்த?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

KGF Chapter 2 First Look | Trailer Update | Yash | Sanjay Dutt | Prashanth Neel

இந்நிலையில், கன்னட நடிகரான யஷ் நடிப்பில் உருவாகி உள்ள கே.ஜி.எஃப் படம் அக்டோபர் 23ம் தேதியை லாக் செய்துள்ளது. ஆயுத பூஜை அதுவுமா? மிகப்பெரிய கிளாஷ் உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் மோதிக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அண்ணாத்த

அண்ணாத்த

கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கினார். தற்போது, ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

காட்டுத்தனமான வெற்றி

காட்டுத்தனமான வெற்றி

கன்னட திரையுலகத்தை இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு யஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் காட்டுத்தனமான வெற்றியை பதிவு செய்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் உருவாகி வரும் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படம் வரும் அக்டோபர் 23ம் தேதி திரைக்கு வருகிறது.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் லீடு கொடுக்கப்பட்ட வில்லன் ஆதீரா கதாபாத்திரத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் ரவீனா டான்டன் நடித்துள்ளார். முதல் பாகமே பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய நிலையில், இரண்டாவது பாகம் மேலும், வெறித்தனமாக வசூலில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படு தோல்வி

படு தோல்வி

அதே நேரத்தில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தர்பார் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. டோலிவுட்டில் வெளியான அலா வைகுந்த புரமுலோ மற்றும் சரிலேரு நீக்கெவரு படங்கள் ஹிட் அடித்த நிலையில், தர்பார் படம் வெற்றியை ருசிக்க தவறியது.

ஆயுத பூஜை கிளாஷ்

ஆயுத பூஜை கிளாஷ்

இந்நிலையில், ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் யஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படமும் ஆயுத பூஜை போட்டியில் நேருக்கு நேர் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியொரு கிளாஷ் ஏற்பட்டால், எந்த படம் போட்டியில் ஜெயிக்கும் என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

பலம்.. பலவீனம்

பலம்.. பலவீனம்

கே.ஜி.எஃப் முதல் பாகம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களுக்கு, அதே அளவிலான எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அண்ணாத்த படத்தையும் சிறுத்தை சிவாவின் இயக்கம் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்

இதற்கு முன்

ஆனால், தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில், இதற்கு முன் வெளியான வேதாளம் மற்றும் விவேகம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுபோன்ற சொதப்பல்கள் ஏதாவது அண்ணாத்த படத்தில் ஏற்பட்டால், கே.ஜி.எஃப் படத்துக்கு வலுவான போட்டியாக அண்ணாத்த களமிறங்குமா? என்பது சந்தேகம் தான்.

மிஸ் ஆன மோதல்

மிஸ் ஆன மோதல்

கே.ஜி.எஃப் சேப்டர் 2 படம், ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு போட்டியாக வெளியாகும் என்று தான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் காரணமாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீசை ராஜமெளலி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்துள்ளார். இதனால், மிகப்பெரிய மோதல் மிஸ் ஆகிடுச்சு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X