»   »  இரண்டு கைகள்... ஒரு இதயம்... ஐஸ், அபிஷேக்கின் "கவிதை கவிதை"!

இரண்டு கைகள்... ஒரு இதயம்... ஐஸ், அபிஷேக்கின் "கவிதை கவிதை"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நட்சத்திர ஜோடி அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய், தங்களது பிசியான படப்பிடிப்புகளுக்கு நடுவே தங்கள் மகளின் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று ஆச்சர்யம் அளித்துள்ளனர்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பின் மகனும், பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவருமான அபிஷேக் பச்சன், கடந்த 2007ம் ஆண்டு, முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராயை மணந்தார்.

இந்தத் தம்பதிக்கு தற்போது 4 வயதில் ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஷுட்டிங்கில் பிசி...

ஷுட்டிங்கில் பிசி...

மகள் பிறந்தபின் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஐஸ்வர்யா ராய், ஜஸ்பா படம் மூலம் மீண்டும் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்தார். தற்போது சரப்ஜித் மற்றும் ஏ தில் ஹே முஸ்கில் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

மகளின் சந்தோஷம்...

மகளின் சந்தோஷம்...

இதேபோல், அபிஷேக்பச்சனும் ஹவுஸ்புல் 3 படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கிறார். சினிமாவில் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும், தன் மகளின் சந்தோஷத்தையும் மனதில் வைத்து செயல்படுகின்றனர் இந்த நட்சத்திர தம்பதி.

பள்ளி ஆண்டு விழா...

பள்ளி ஆண்டு விழா...

அந்தவகையில், ஆரத்யா மும்பையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் தற்போது படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரத்யாவின் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. இதில், அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஷில்பாவின் மகன்...

ஷில்பாவின் மகன்...

ஆரத்யா படிக்கும் இதே பள்ளியில் தான், நடிகை ஷில்பா ஷெட்டி, குந்தா தம்பதியின் மூன்று வயது மகன் வியானும் படிக்கிறான். எனவே, அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செல்பிபுள்ள...

செல்பிபுள்ள...

இந்த நிகழ்ச்சியின் போது, ஷில்பா தம்பதி, ஐஸ்வர்யா தம்பதியுடன் எடுத்துக் கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.

2 கைகள்... ஒரு இதயம்

2 கைகள்... ஒரு இதயம்

முன்னதாக, அபிஷேக் பச்சன் தனது மகள் ஆரத்யாவின் கையில் இதய வடிவ ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கூடவே, இரண்டு கைகள், ஒரு இதயம் என கவிதை மாதிரி அதற்கு கருத்தும் பதிவு செய்துள்ளார்.

English summary
Sunday was spent on daddy duty - Abhishek and wife Aishwarya Rai Bachchan were at the four-year-old daughter Aaradhya's Annual Day in school. They were accompanied by Shilpa and Raj Kundra, whose three-year-old son Viaan also studies in the same school.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil