»   »  நடிகை மஞ்சு வாரியரை பற்றி அவரது மகள் உண்மையிலேயே இப்படி கூறினாரா?

நடிகை மஞ்சு வாரியரை பற்றி அவரது மகள் உண்மையிலேயே இப்படி கூறினாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தன் வாழ்க்கையை தனது தாயும், மலையாள நடிகையுமான மஞ்சு வாரியர் கெடுத்துவிட்டதாக மீனாட்சி தெரிவித்துள்ளார் என்று எழுதப்பட்டுள்ள பிளாக் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மலையாள நடிகை மஞ்சு வாரியர் பற்றி யாரோ ஒருவர் தனது பிளாக்கில் மலையாளத்தில் எழுதியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிப்புக்கு பெயர் போன மஞ்சு நடிகர் திலீப்பை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார்.

கணவரை பிரிந்த பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மஞ்சு

மஞ்சு

ஒரு பெண் குழந்தைக்கு தாயான மஞ்சு மீண்டும் நடிக்க வந்ததில் மல்லுவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவரின் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது.

விவாகரத்து

விவாகரத்து

திலீப்பும், மஞ்சு வாரியரும் விவாகரத்து பெற நடிகை காவ்யா மாதவன் காரணம் என்று பேச்சாக கிடந்தது. திலீப்புக்கும், கணவரை பிரிந்த காவ்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் தான் மஞ்சுவின் வாழ்க்கைக்கு வேட்டு வைத்தது என்று கூறப்பட்டது.

நடிப்பு ஆசை

நடிப்பு ஆசை

மஞ்சு வாரியருக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் தான் அவர் திலீப்பை பிரிந்து சென்றுவிட்டார் என்று யாரோ தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.

மகள் மீனாட்சி

மகள் மீனாட்சி

மஞ்சு வாரியர் தனது வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக அவரின் மகள் மீனாட்சி தெரிவித்ததாகவும் அந்த பிளாக்கில் கூறப்பட்டுள்ளது. மஞ்சுவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் யாரோ அந்த பிளாக்கில் எழுதியுள்ளதாக விபரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

காதல்

காதல்

மஞ்சுவுக்கும் விளம்பர படங்களை இயக்குபவர் ஒருவருக்கும் காதல் என்று வதந்தி பரவியது. அப்படி எல்லாம் காதல் எதுவும் இல்லை என்று மஞ்சுவுக்கு நெருக்கமான ஒருவர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

English summary
An anonymous blog has mentioned that Meenakshi Dileep accused her mother Manju Warrier of ruining her life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil