»   »  இப்படியே மொத்த படத்தையும் ரிலீஸ் பண்ணிடுங்க சைத்தான் பிரதர்… நல்லாருக்கும்!

இப்படியே மொத்த படத்தையும் ரிலீஸ் பண்ணிடுங்க சைத்தான் பிரதர்… நல்லாருக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த சினிமாவை புரமோட் பண்ண என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் சைத்தான் படத்தைதான் குறிப்பிடுகிறோம்.

சைத்தான் படத்தின் முதல் ஒன்பது நிமிடத்தை அப்படியே ரிலீஸ் செய்தார்கள் போன மாதம். படம் ரூபாய் நோட்டு பிரச்னையால் தள்ளிக்கொண்டே போக படத்தின் ஹைப்பை அப்படியே வைத்திருக்க நேற்று படத்தின் இன்னொரு ஐந்து நிமிட காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள்.

Another 5 mins clip released from Saithan

இரண்டு வீடியோவையும் அடுத்தடுத்து பார்ப்பவர்களின் மைண்ட் வாய்ஸ் தான் நாம் மேலே சொல்லியிருக்கும் டைட்டில்!

டெய்ல் பீஸ் - இந்த படம் எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் சுஜாதா பெயரைக் குறிப்பிடாமல் விளம்பரங்களை வெளியிட்ட படக்குழு, மீடியாக்கள் குட்டியபிறகு இப்போது சுஜாதா பெயரையும் சேர்த்திருக்கிறது. சரக்கு இல்லனு தெரியுதுல்ல... ஒரிஜினல் சரக்கு யாருதுன்னாவது சொல்லலாம்ல?

English summary
Saithan film crew has been released another five minutes video of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil