பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட வலிமை அப்டேட்...கூலாகும் தல ரசிகர்கள்

சென்னை : கடந்த 2 வருடங்களாக தினமும் சமூக வலைதளங்களில் பேசப்பட்ட வார்த்தை னெ்றால் அது தல அஜித் நடிக்கும் வலிமை படம் தான். கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் தான் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

படத்தின் வேலைகள் துவங்கி ஓராண்டிற்கு மேல் ஆகியும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாததால் பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள், பிரச்சாரத்திற்கு சென்ற தமிழக முதல்வரிடமும், இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி நடந்த சேப்பாக்கம் அரங்கிலும், தமிழகம் வந்த பிரதமர் மோடியிடமும் கூட வலிமை அப்டேட் பற்றி கேட்கும் அளவிற்கு சென்று விட்டனர்.

Another amazing Valimai update from an unexpected celebrity

இதனால் அஜித் தனது ரசிகர்களிடம், பொறுமை காக்க வேண்டும். சரியான நேரத்தில் தயாரிப்பாளர்கள் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள். சினிமா என்பது பொழுதுபோக்கு, வாழ்வாதாரம் இல்லை என அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டார்.

இந்த சமயத்தில் இசையமைப்பாளர் தமான், வலிமை பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அது என்னவென்றால், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்காக அட்டகாசமான பாடல் ஒன்றை இசையமைத்துள்ளார். இது காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். தல ரசிகர்களை கொண்டாட வைப்பதாக இந்த பாடல் நிச்சயம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

வலிமை படக்குழு அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளது. அங்கு எடுக்கும் சண்டை காட்சியுடன் படத்தின் பணிகள் நிறைவடைய உள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளரான போனி கபூரே ஏற்கனவே உறுதிபடுத்தி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X