அட இவரா... வதந்த பாலன் படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ் பிரபலம்
சென்னை : விஜய் டிவி.,யின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களிலும் பங்கேற்ற பலரும், பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பெரிய ஸ்டாராக வருகின்றனர். வனிதா விஜயக்குமார், அரந்தாங்கி நிஷா, ஆரி, லாஸ்லியா, கவின், தர்ஷன் என பலரும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.

இதில் பிக்பாஸ் சீசன் 3 ல் கலக்கிய வனிதா விஜயக்குமார் தற்போது நடிகையாகவும் , தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். அந்தகன், பிக்அப் டிராப், வசந்த பாலனின் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கமிட்டி ஆகி உள்ளார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் தனது பள்ளி பருவ நண்பர்களை ஒன்றிணைத்து Urban Boyz Studios பேனரில் தனது முதல் தயாரிப்பை துவக்குவதாக அறிவித்தார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் லீட் ரோலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் வனிதா விஜயக்குமார், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அரந்தாங்கி நிஷா, பாவா லட்சுமணனும் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் தகவலாக, மற்றொரு பிக்பாஸ் பிரபலமும் இந்த படத்தில் இணைவதாக வசந்தபாலன் சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 ல் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி தான் புதிதாக இந்த படத்தில் இணைந்துள்ளாராம். இவருடன் தயாரிப்பாளரும் நடிகருமான ஜெஎஸ்கே சதீஷ், ஷா ரா ஆகியோரும் முக்கியமான ரோல்களில் நடிக்க போகிறார்களாம்.
சுரேஷ் சக்கரவர்த்தி ஏற்கனவே சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும், அதற்கு பிறகும் மொட்டை தாத்தா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் சுரேஷ். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
ஆனால் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் வனிதா, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் சுரேஷ் சக்கரவர்த்தியால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாமல் போனது.
அதே சமயம் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில வாரங்களில் பலரையும் கவர்ந்த, பிரபலமான போட்டியாளராக இருந்து வந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. பழைய பாடல்கள் சுற்றில் அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே சுரேஷ் சக்கரவர்த்தி மேக்அப் போட்டிருந்தது சோஷியல் மீடியாவில் வைரலானது.


Click it and Unblock the Notifications











