ஓவர் அழகு குற்றமாக மட்டும் இருந்தால் நீங்கள் நிச்சயம்.. பிரபல நடிகையை செல்லமாக மிரட்டும் ஃபேன்ஸ்!

சென்னை: ஓவர் அழகு குற்றமாக இருந்தால் உங்களை கைது செய்திருப்பார்கள் என்று நடிகையின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Saindhavi's cute Maternity photoshoot full video | GV. Prakash • Baby Bump

பிரபல இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர். இவர், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். பல தொடர்களிலும் நடித்துள்ள இவர் ஹாலிவுட் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

தொழிலதிபர்

தொழிலதிபர்

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் அலெக்ஸ் ஓ நீலுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை ஷாமா சிக்கந்தர் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரைப் பிரிந்தார். பின்னர் அமெரிக்க தொழிலதிபர் ஜேம்ஸ் மில்லிரான் என்பவரைக் காதலித்தார். இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு துபாயில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகக் கூறுகிறது விக்கி.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

கொரோனா லாக்டவுனால் நடிகர், நடிகைகள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். தங்கள் கருத்துக்களை அவ்வப்போது அதில் தெரிவித்து வருகிறார்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் தங்கள் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்துவருகின்றனர். இதைப் பார்ப்பதற்காக நெட்டிசன்ஸ் காத்துக் கிடக்கின்றனர்.

ஷாமா சிக்கந்தர்

ஷாமா சிக்கந்தர்

நடிகைகள் பதிவு செய்யும் புகைப்படங்களை புகழ்ந்து கருத்துக்களை தெரிவிப்பார்கள். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர் ஷாமா சிக்கந்தர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட போட்டோ வைரலானது. அதற்கு ஏராளமான ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்திருந்தனர்.

பயம் இல்லை

பயம் இல்லை

இந்நிலையில் அவர் இப்போது புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். செம கிளாமராக இருக்கும் இந்த ஸ்டில் வைரலாகி வருகிறது. இதற்கு கேப்ஷனாக, 'நான் தேவதையாக இருக்க வேண்டும். எனக்கு ஆழங்களைப் பற்றிய பயம் இல்லை மற்றும் மேலோட்டமான வாழ்க்கை பற்றியும் பயமில்லை என்று கூறியுள்ளார்.

குற்றமாக இருந்தால்

குற்றமாக இருந்தால்

இதற்கு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஒருவர், இந்த போட்டோவை பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்டைலிஷாகவும் இருக்கிறது. ஓவர் அழகாகவும் செக்ஸியாகவும் இருப்பது குற்றமாக இருந்தால், நீங்கள் நிச்சயம் கைது செய்யப்பட்டு இருப்பீர்கள் என்று செல்லமாகக் கூறி இருக்கிறார் ஒரு பாசக்கார நெட்டிசன்.

பாசிட்டிவ் அப்ரோச்

பாசிட்டிவ் அப்ரோச்

மற்றொருவர், பாசிட்டிவான உங்கள் அப்ரோச், அழகான உங்கள் ஸ்டில்ஸ், உங்கள் ஸ்டைல் ஆகியவை உங்கள் ரசிகனாக இன்னும் அதிகமாக என்னை மாற்றுகிறது என்று ஒருவர் புகழ்ந்துள்ளார். பலர், ஹாட், ஸ்டன்னிங் என்று வழிந்துள்ளனர். ஒருவர், அழகான போஸ் இது, வார்த்தையே இல்லை என்று கூறியுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X