இன்றைய படங்கள்... வன்மம், நாய்கள் ஜாக்கிரதை, காடு, விழிமூடி யோசித்தால்
சென்னை: இந்த வெள்ளிக்கிழமை வன்மம், காடு உள்பட 5 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிப் படங்களும் இன்று வெளியாகின்றன. எனவே இந்த வாரமும் திரையரங்குகளுக்கு திண்டாட்டமான நிலைதான்.

வன்மம்
தமிழ்ப் படங்களில் சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை மற்றும் விஜய் சேதுபதி - கிருஷ்ணா நடித்த வன்மம் படங்களுக்கு ஓரளவு அதிக, நல்ல அரங்குகள் கிடைத்துள்ளன.

காடு
இந்த இரு படங்கள் தவிர, சின்னஞ் சிறிய வண்ணப் பறவை, காடு, விழி மூடி யோசித்தால் போன்ற படங்களும் இன்று வெளியாகின்றன. இவற்றில் சமுத்திரக்கனி நடித்த காடு படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேப்பி எண்டிங்
இந்தியில் ஹேப்பி எண்டிங், டிட்டூ எம்பிஏ ஆகிய இரு படங்கள் வெளியாகின்றன.

ஹாலிவுட் படங்கள்
டென்சல் வாஷிங்டன் நடித்த ஹாலிவுட் படம் தி ஈக்வலைசர் மற்றும் ஜிம் கேரியின் டம்ப் அன்ட் டம்பர் டு ஆகிய படங்களும் வெளியாகின்றன.

மலையாளத்தில்...
தெலுங்கில் தேசிய விருது பெற்ற நா பங்காரு தல்லி படமும் மலையாளத்தில் லால் பகதூர் சாஸ்திரியும் இன்று வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications











