#D43 படத்தில் இணைந்த இரண்டாம் நாயகி.. ரசிகர்கள் வரவேற்பு.
சென்னை: தனுஷ், மாளவிகா மோஹனன் நடிப்பில் படப்பிடிப்பு துவங்க உள்ள பெயரிடப்படாத படம் #D43.
இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க, சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோஹனனை தொடர்ந்து ஸ்ம்ருதி வெங்கட் தேர்வு செயப்பட்டுள்ளார்.

புதிதாக ஸ்ம்ருதி வெங்கட்
பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோஹனன் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அதன் பின்னர் #D43 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். மாளவிகாவை தொடர்ந்து தற்போது ஸ்ம்ருதி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்ம்ருதி ட்வீட்
ஸ்ம்ருதி வெங்கட் தமிழில் தடம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வேறு எதிலும் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் #D43 யில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார் ஸ்ம்ருதி.

ரசிகர்கள் குஷி
3 நாட்களுக்கு முன்னர் பாடலாசிரியர் விவேக் திரைக்கதை எழுதபோவதாக வெளிவந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று #D43 படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபோல தொடர்ந்து வரும் #D43 படத்தின் அப்டேட்கள் தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

தலைப்பு வெளிவருமா?
தனுஷ், மாளவிகா மோஹனன், ஸ்ம்ருதி வெங்கட் என #D43 படத்தின் நடிகர்கள் தேர்வு ஏறத்தாழ முடிந்த நிலையில் உள்ளது. இந்த படத்தின் தலைப்பு & படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் பொங்கலை முன்னிட்டு வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











