கண்ணா, இந்த நியூஸைப் படிச்சீயா...?
இந்தியத் திரையுலகின் அட்டகாசமான சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ரஜினிகாந்த். தனி ஸ்டைல், ஸ்டைலிஷ் நடிப்பு என்று தனக்கென தனிப் பாதையில் தனி பாணியில் அசைக்க முடியாத ராஜ நடை போட்டு வருபவர் ரஜினிகாந்த்.
ரஜினியின் பன்ச் டயலாக்குகளை வைத்து நிறைய ஜோக்குகள் வந்துள்ளன. அவை ரஜினியைப் போலவே பிரபலமானவை.
அதே பாணியில் ரஜினியை வைத்து ஒரு டிரைவிங் லைசென்ஸ் ஜோக் ரொம்ப காலமாக இன்டர்நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. அதுகுறித்து பார்ப்போமா...

கவர்ன்மென்ட் ஆப் ஸ்பேஸ்
இந்த டிரைவிங் லைசென்ஸின் தலையே அதாவது முதல் வரியே கலவரமாக இருக்கிறது. கவர்ன்மென்ட் ஆப் ஸ்பேஸ், போக்குவரத்துத் துறை என்று முதல் வரி ஆரம்பிக்கிறது.

யுனிவர்ஸ் பூராவும்
அடுத்த வரி அதகளமாக இருக்கிறது. அதாவது அண்டசராசரம் முழுவதும் வண்டி ஓட்டுவதற்காக வழங்கப்படும் உரிமம் என்பது அதன் தமிழாக்கம்.

யு போட்டு ஏகப்பட்ட 9
அடுத்து உரிம எண். அதில் யு என்ற ஆங்கில எழுத்தைப் போட்டு அடுத்து ஏகபப்ட்ட 9ம் நம்பரை போட்டுள்ளனர்.

காந்த், மை நேம் இஸ் ரஜினிகாந்த்
அடுத்து பெயர். அதில் ரஜினிகாந்த் என்று கொட்டை எழுத்துக்களில் போட்டுள்ளனர்.

எல்லா ரத்தமும் ஒன்னுமா...
அடுத்து ரத்தப் பிரிவு. அதில் இருக்கிற அத்தனை மனித ரத்த வகைகளையும் போட்டுள்ளனர்.

பைக் முதல் ராக்கெட் வரை ஓட்டலாம்
எந்த வகையான வண்டியை ஓட்டலாம் என்ற இடத்தில் பைக், லாரி, பஸ், ஜெட், ராக்கெட் மற்றும் எல்லா வண்டியும் என்று உள்ளது.

பிறந்த நாளன்றே கிடைத்த உரிமம்
லைசென்ஸ் வழங்கப்பட்ட நாளாக ரஜினியின் பிறந்த நாளையே போட்டுள்ளனர்.

99999ம் ஆண்டு வரை செல்லுமாம்
உரிமம் செல்லுபடியாகும் காலமாக 29.02.99999 என்று போட்டுள்ளனர். தேதியையும், மாதத்தையும், வருடத்தையும் இன்னொரு வாட்டி படிச்சுக்குங்க...

என்ன ராஸ்கலா..!
பன்ச் இல்லாமல் ரஜினி படமா.. அதேபோல இந்த லைசென்ஸிலும் ஒரு பன்ச்.. அதுதான் என்ன ராஸ்கலா என்ற வாசகம். கூடவே மைன்ட் இட் என்றும் ஒரு சூப்பர் பன்ச். பிறகு ரஜினியின் கையெழுத்து..
இந்த லைசன்ஸ் எப்டிருக்கு... ?


Click it and Unblock the Notifications