இதுக்கு மேல இடம் இல்லை.. இப்பவே ஹவுஸ்புல்.. தளபதி 64 படத்தில் அடுத்த ஹீரோவும் இணைந்துவிட்டார்!
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் புதிய ஹீரோ ஒருவர் இணைந்துள்ளார்.
சென்னை: விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் புதிய ஹீரோ ஒருவர் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
நடிகர் விஜய்யின் இந்த 64வது படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி கடந்த வாரம்தான் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன
இந்த படம் மிகவும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆண்டனி வர்கீஸ் நடிப்பதாக நேற்றுதான் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதுசு
இந்த நிலையில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் புதிய ஹீரோ ஒருவர் இணைந்துள்ளார். ஆம் இந்த படத்தில் தற்போது நடிகர் சாந்தனு நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

செம
இந்த நிலையில்தான் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் கதையில் மீண்டும் விஜய் , விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் உடன் தற்போது சாந்தனு நடிப்பதாக உறுதியாகி உள்ளது. படத்தில் இவரின் கதாபாத்திரம் குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

என்ன ரகசியம்
அதே சமயம் படத்தில் இத்தனை நடிகர்கள் ஏன் நடிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. படத்தில் இத்தனை முக்கியமான பெரிய ஹீரோக்கள் நடிக்க வேண்டிய அவசியம் என்ன. 4 முக்கியமான நடிகர்கள் நடிக்கும் அளவிற்கு படத்தின் கதையில் என்ன இருக்கிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











