ஆகஸ்டில் வரிசை கட்டியுள்ள வலிமை அப்டேட்!

சென்னை: H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை.

Recommended Video

Thala Ajith from a biking trip in Sikkim goes viral

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

சாதனை செய்தது

சாதனை செய்தது

வலிமை படத்தின் அப்டேடுக்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்து வந்த நிலையில் சமீபத்தில் யாரும் எதிர்பாராத வகையில் படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று பல சாதனைகளை செய்தது.

இறுதிகட்ட பணிகள்

இறுதிகட்ட பணிகள்

இன்னும் படத்தின் இறுதிகட்ட பணிகள் மிச்சம் உள்ளது. அதற்காக படக்குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடக்கவுள்ளன. இதனை ஆகஸ்ட் மாதத்தில் படக்குழு செயற்படுத்தி முடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

அப்டேட் வந்து சில நாட்களே ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அடுத்த அப்டேட் எப்போது என்ற ஆர்வம் மிகுதியாகவே உள்ளது. அடுத்த அப்டேட்டாக ஆகஸ்ட் மாதத்தில் மதுரை ஸ்டைலில் ஒரு குத்துப்பாட்டு யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவரவுள்ளது என பேசப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முக்கியமான எதிர்பார்ப்பு வலிமை படத்தின் ரிலீஸ் தேதி ஆகும். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வரவுள்ள நிலையில் வலிமை தீபாவளிக்கா இல்லை அதற்கு முன்னரே வெளிவருமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் படக்குழு ரிலிஸ் தேதியுடன் ஓரு புது போஸ்டரை வெளியிடவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X