twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை

    |

    சென்னை: மோடி அரசியலில் நுழைந்தது முதல் தற்போதைய காலம் வரையிலும் உள்ள நிகழ்வுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து திரைப்படங்களை எடுத்துள்ளனர். பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் கடந்த மே மாதம் வெளியானது. மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இந்நிலையில் நரேந்திர மோடியை பற்றி மற்றுமொரு படம் தயாரிக்கப்படவுள்ளது சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இப்படத்திற்கு சஞ்சய் திரிபாதி திரைக்கதை எழுதி இயக்கவும் செய்கிறார். இந்த படத்திற்கு மன் பைராகி என்று பெயரிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் 69ஆம் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்திய சினிமாவில் பலரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பல படங்கள் வெளியாகவும் உள்ளன. குறிப்பாக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரது வாழ்க்கையை மையமாக வைத்து பல பயோபிக்கள் வெளியாகியுள்ளன.

    அது நான் கிடையாது.. விடுங்க.. இருந்த மரியாதையே போச்சு.. புலம்பும் ''வைரல்'' நடிகை!அது நான் கிடையாது.. விடுங்க.. இருந்த மரியாதையே போச்சு.. புலம்பும் ''வைரல்'' நடிகை!

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்கள் என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர் ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். இதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது.
    தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி போன்ற பலரது பயோபிக்களும் உருவாகி வருகின்றன.

    மோடி பயோபிக்

    மோடி பயோபிக்

    பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய பயோபிக்கை எடுத்தால் வசூலை அள்ளளாம் என்ற நினைப்பில் ஆளாளுக்கு நான் முந்தி நீ முந்தி என்று நாடு முழுவதும் போட்டி போட்டு மோடியின் பயோபிக் படங்களை எடுக்க தொடங்கியுள்ளனர். அவர் பிறந்த தேதியிலிருந்து பள்ளிப்பருவம் வரையிலான காலகட்டத்தை மட்டுமே குறும்படமாக எடுத்திருக்கின்றனர்.

    பிஎம் நரேந்திர மோடி

    பிஎம் நரேந்திர மோடி

    மோடி அரசியலில் நுழைந்தது முதல் தற்போதைய காலம் வரையிலும் உள்ள நிகழ்வுகளை மட்டுமே அடிப்படையாக வைத்தும் திரைப்படங்களை எடுத்துள்ளனர். பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் கடந்த மே மாதம் வெளியானது. மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார்.

    மன் பைராகி

    மன் பைராகி

    இந்நிலையில் நரேந்திர மோடியை பற்றி மற்றுமொரு படம் தயாரிக்கப்படவுள்ளது சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இப்படத்திற்கு சஞ்சய் திரிபாதி திரைக்கதை எழுதி இயக்கவும் செய்கிறார். இந்த படத்திற்கு மன் பைராகி என்று பெயரிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் 69ஆம் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சோசியல் மீடியாவில் பலரும் அதனை ஷேர் செய்துள்ளனர்.

    கர்மயோகி

    கர்மயோகி

    தமிழில் வெளியாகப்போகும் படத்திற்கு கர்மயோகி என்று பெயரிட்டுள்ளனர். மோடி அவர்களின் இளம் வயதில் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து திரைக்கதை அமைத்துள்ளனர். நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்தும் படத்தில் சொல்லப்பட்டிருக்கும். இதுவரையில் நரேந்திர மோடியைப் பற்றி சொல்லப்படாத பல விஷயங்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் என்றார் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி.

    வலிமை வாய்ந்த மனிதர்

    வலிமை வாய்ந்த மனிதர்

    நம் நாட்டின் உயர்ந்த வலிமையான மனிதர் பிரதமர் மோடி. அவரது சொல்லப்படாத உணர்வுப்பூர்வமான கதை இது. இந்தப்படம் ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் சஞ்சய் திரிபாதி.

    English summary
    Birthday wishes for Prime Minister Narendra Modi on his 69th birthday have been pouring in since morning. But none have been half as special as that of Akshay Kumar’s and Prabhas’s, as they took to social media to announce a special feature, Mann Bairagi, based on the the defining moment of our PM's life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X