»   »  ஏஆர் ரஹ்மான் குடும்பத்திலிருந்து இ ஆர் அசார் காஷிஃப்!

ஏஆர் ரஹ்மான் குடும்பத்திலிருந்து இ ஆர் அசார் காஷிஃப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏ ஆர் ரஹ்மான் குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அவர் பெயர் இஆர் அசார் காஷிஃப்.

ரஹ்மானின் தங்கை மகனான இவர் ‘கண்ணாலே' என்ற மியுசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

Another musician from AR Rahman family

இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க பிரபல பாடகர் ஜாவேத் அலி மற்றும் பாடகர் ஸ்ரீநிவாஸின் மகள் சரண்யா ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளனர்.

Another musician from AR Rahman family

இந்த மியுசிக் வீடியோவை அஷ்வின் இயக்கியுள்ளார். விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவுள்ள ‘ பிக் தமிழ் மெலோடி அவார்ட்ஸ்' விருது வழங்கும் விழாவில் இந்த மியுசிக் வீடியோவை வெளியிடவுள்ளனர்.

Another musician from AR Rahman family

"சிறு வயது முதலே இசை மீது பெரும்பற்று இருந்தது. ரஹ்மான் அங்கிள் ஸ்டுடியோவிற்கு சென்று அவர் வேலை செய்வதை உன்னிப்பாய் கவனிப்பதுண்டு. இந்த மியுசிக் வீடியோ எனது நெடுநாள் கனவு. ரஹ்மான் மாமா மற்றும் எனது சகோதரன் ஜிவி பிரகாஷ் இருவரும் என்னை வாழ்த்தினர். உங்கள் அனைவருக்கும் எனது முதல் பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் அசார் காஷிஃப்.

English summary
ER Azhar Kaship, nephew of AR Rahman is entering in to cinema as music director.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil