‘கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு’

By Mayura Akilan

அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் புத்தம் புதிய திரைப்படம் ஒன்று தற்போது தயாராகி வருகிறது. 'கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தினை டி.எஸ்.கே. புரடெக்சன் கோவிலம்பாக்கம் டி.சிங்காரம் தயாரிக்க ஸ்ரீ கிருஷ்ணா இயக்குகிறார்.

ஒற்றை வரியில் படத்திற்கு பெயர் வைப்பது போய் இப்போது நீளமாக பெயர்வைக்க ஆரம்பித்துவிட்டனர். முற்றிலும் புது முகங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் சிங்காரமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அறிமுக நாயகன் நாயகி

அறிமுக நாயகன் நாயகி

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதவராம் அறிமுகமாகிறார். நாயகிகளாக பிரியா, மஞ்சு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சகோதர பாசம்

சகோதர பாசம்

சகோதரிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரு சகோதரன் போராடும் கதைக் களமே கத்தியை தீட்டாதே எந்தன் புத்தியை தீட்டு.

கலைஞர் டிவி ப்ளாரன்ஸ் ஃபெரைரா

கலைஞர் டிவி ப்ளாரன்ஸ் ஃபெரைரா

கலைஞர் டிவியின் ப்ளாரன்ஸ் பெரைரா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இவர்களுடன் சிங்காரம் பாரம்பரிய சிலம்பாட்டக்கலை வீரராக நடித்திருக்கிறார்.

சென்னையைச் சுற்றி

சென்னையைச் சுற்றி

இந்த திரைப்படம், பாண்டிச்சேரி, ஓசூர், கோவிலம்பாக்கம், பொன்னேரி மற்றும் சென்னையின் சுற்றுப் புறப் பகுதிகளில் நடைபெறுகிறது.

விரைவில் வெள்ளித்திரையில்

விரைவில் வெள்ளித்திரையில்

இந்தப் படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 28ம் தேதி சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. ஆக்சன் கலந்த சென்டிமென்ட் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

கத்தியை தீட்டதே புத்தியை தீட்டு

கத்தியை தீட்டதே புத்தியை தீட்டு

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ஸ்ரீ கிருஷ்ணா, ஒளிப்பதிவு -முரேஷ், இசை - பிரேம், பாடல்கள் திவ்ய கவி, எஸ்.கே.விஜயன், சுபாஷ், எடிட்டர்-டி.எஸ்.ஆர். சுபாஷ், நடனம் - ராக் சங்கர், ஆக்சன் - திரில் சேகர், கலை - சுரேஷ், மக்கள் தொடர்பு - செல்வரகு, தயாரிப்பு - கோவிலம்பாக்கம் டி. சிங்காரம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X