சியான் 60 ல் இணையும் மற்றொரு பேட்ட நடிகர்...வரவேற்ற கார்த்திக் சுப்புராஜ்

சென்னை : விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தின் வேலைகள் துவங்கியது முதல் அடுத்தடுத்து பல அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் என பலர் நடிக்கிறார்கள்.

பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதனால் பேட்ட படத்தில் நடித்த பலரையும் இந்த படத்திலும் மீண்டும் நடிக்க வைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டது.

 Another Petta young actor to join in Chiyaan 60

சில நாட்களுக்கு முன் இந்த படத்திற்கு அனிருத்திற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பார் என அப்டேட் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பேட்ட படத்தில் நடித்த சனந்த் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அப்டேட் வெளியிடப்பட்டது.

தற்போது, பேட்ட படத்தில் நடித்த மற்றொரு இளம் நடிகரான தீபக் பரமேஷ் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர் மெர்குரி, பேட்ட, ஜெகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இது கார்த்திக் சுப்பராஜூடன் தீபக் இணையும் நான்காவது படமாகும். சியான் 60 ல் தீபக் இணைந்திருப்பதை கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டரில் தெரிவித்து, அவருக்கு வரவேற்பும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X