’பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து இன்னும் ஒரு தரமான அப்டேட் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்
சென்னை; மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'பொன்னி நதி' பாடல், பல மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படம் குறித்த சிறப்பு அப்டேட் ஒன்று ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

நினைத்ததை சாதித்த மணிரத்னம்
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நாவலை படமாக ஏடுக்க வேண்டும் என்ற கனவு, எம்.ஜி.ஆர், கமல் என பலரும் முயற்சித்தனர். இறுதியில் இந்த கனவை தற்போது இயக்குநர் மணிரத்னம் நனவாக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நட்சத்திரப் பெருங்கூட்டம்
பொன்னியின் செல்வன் படம் சூட்டிங் தொடங்கியதில் இருந்தே, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்தும் அதிகமானது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், ரகுமான் என நடிகர்களின் பட்டியல் பொன்னி நதி போல நீண்டுகொண்டே சென்றது. இப்படி பெரும் நட்சத்திரங்களை வைத்து, மொத்தமே 120 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம்.

ஏ.ஆர். ரஹ்மானின் பொன்னி நதி
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இதில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரே பாடியிருந்த இந்தப் பாடல், யூடியூப்பில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால், பொன்னியின் செல்வன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இப்பாடல் கார்த்தியின் இன்ட்ரோ சாங் என்பதும் உறுதியாகியுள்ளது.

அமர்க்களமான அப்டேட் இதோ
ரஹ்மானின் இசையில் 'பொன்னி நதி' பாடல் ரசிகர்களை பரவசப்படுத்தி வருவது ஒருபக்கம் இருக்க, இரண்டாவது சிங்கிள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்தப் படத்தின் பின்னணி இசைக்கான ஆடியோ மிக்ஸிங் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆடியோ மிக்ஸிங்காக ஹாலிவுட்டில் இருந்து வந்திருந்த பிரபல Greg Townley, அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக, ரஹ்மானின் ஸ்டூடியோவில் இருந்து போட்டோ போட்டு அப்டேட் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











