மீண்டும் சத்யராஜ் - கவுண்டமணி ஸ்டைல் காமெடி... ‘பொங்கி எழு மனோகரா’வில் !

சென்னை: நடிகர் இர்பான் நாயகனாக நடித்து வரும் படம் ‘பொங்கி எழு மனோகரா'. பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குநராக பணி புரிந்தவரான ரமேஷ் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் முக்கியமான வேடமொன்றில் சிங்கம் புலி நடித்துள்ளார். காமெடி கலந்த காதல் கதையான இதில், இர்பானும் சிங்கம்புலியும் சேர்ந்து நடித்துள்ள காமெடிக் காட்சிகள் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை பிரபலமான ஹீரோ- காமெடியன் ஜோடிகள் என சிலர் தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். அவர்களில் சத்யராஜ் - கவுண்டமணி ஜோடியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

Another Sathyaraj-Goundamani comedy in the making

அந்தவகையில், இப்படத்தில் இர்பான் - சிங்கம்புலி நடித்திருக்கும் காமெடிக் காட்சிகள் சத்யராஜ் - கவுண்டமணி காமெடியை நினைவு படுத்துவதாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் கதை 1995-96களில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாம். கொடைக்கானல், சத்தியமங்கலம் மற்றும் சென்னையின் சில இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

சத்யராஜ், கவுண்டமணி காமெடி மாதிரின்னா ஓகேதான்.. அதற்காக அவர்களின் காமெடியை காப்பியடித்து சுட்டுராதீங்கப்பா....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X